அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இந்தியா – டெலேவார் (அமெரிக்கா) இடையே உயிரி உற்பத்தி பணிக்குழுவை உருவாக்க வேண்டும்- மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
இடுகை இடப்பட்ட நாள்:
02 MAR 2026 4:01PM by PIB Chennai
இந்தியாவும் அமெரிக்காவும் மேம்பட்ட உயிரி உற்பத்தித் துறையில் இந்தியா – டெலேவார் கூட்டாண்மையையொட்டி செயல்பட வேண்டும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். ஆராய்ச்சி, உற்பத்தி மற்றும் புத்தொழில் சூழல்களில் விவாதங்களை உறுதியான ஒருங்கிணைப்புகளாக மாற்றுவதற்கு சிறு பணிக்குழுவை உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.
டெலேவார் ஆளுனர் திரு மேட் மெயர் தலைமையிலான அமெரிக்க பிரதிநிதிகள் குழு இன்று சேவா தீர்த்தில் அமைச்சரை சந்தித்தபோது இதுகுறித்து பரிந்துரைக்கப்பட்டது. மருந்து உற்பத்தி, உயிரி தொழில்நுட்பம், தூய்மை எரிசக்தி மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகள் அடிப்படையிலான தொழில்துறை வளர்ச்சி ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்புகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
அறிவியல், தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம் ஆகியவை இந்தியா – அமெரிக்கா இடையே விரிவான உத்திசார் கூட்டாண்மையின் முக்கிய தூணாக உள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
உயிரி தொழில்நுட்பம் மற்றும் மருந்து கண்டுபிடிப்புகளுக்கான உலகளாவிய மையமாக இந்தியா உருவாவதையும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை பெரிய அளவிலான, செலவு குறைந்த உற்பத்தி நிலை வரை விரிவுபடுத்தும் திறன்களையும் அவர் எடுத்துரைத்தார்.
அரசு, கல்வித்துறை, தொழில் மற்றும் புத்தொழில் நிறுவனங்களை இணைக்கும் இந்தியாவின் ஒருங்கிணைந்த புதுமைக் கண்டுபிடிப்பு கட்டமைப்பை சுட்டிக்காட்டிய அமைச்சர், 37 ஆய்வகங்கள் மற்றும் 7,500-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளைக் கொண்ட அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி குழுமம் நாட்டின் தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளில் பெரும்பகுதிக்கு காரணமாக உள்ளது என்று குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2234522®=3&lang=1
***
TV/IR/LDN/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2234634)
வருகையாளர் எண்ணிக்கை : 10