நிதி அமைச்சகம்
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, தகுதியான உற்பத்தியாளர் இறக்குமதியாளர்களுக்கு சுங்க வரி செலுத்துவதில் சில வசதிகளை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் அறிமுகப்படுத்துகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
01 MAR 2026 10:35AM by PIB Chennai
2026–27 மத்திய பட்ஜெட் அறிவிப்பைத் தொடர்ந்து, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC), தகுதிவாய்ந்த உற்பத்தியாளர் இறக்குமதியாளர்கள் (EMIs) எனப்படும் புதிய வகை இறக்குமதியாளர்களுக்கு சுங்க வரியை ஒத்திவைத்து, தாமதமாகச் செலுத்தும் வசதியை செயல்படுத்துகிறது. இதன் மூலம் நம்பகமான உற்பத்தியாளர்களுக்கு ஒரு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பிப்ரவரி 28, 2026 தேதியிட்ட சுற்றறிக்கை எண். 08 /2026 மூலம் மறைமுக வரிகள் வாரியம் விரிவான தகுதி நிபந்தனைகள், விண்ணப்ப செயல்முறை, செயல்பாட்டு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இந்த வசதி ஏப்ரல் 1, 2026 முதல் கிடைக்கும். மேலும் மார்ச் 31 , 2028 வரை இது அமலில் இருக்கும்.
திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை மார்ச் 1 , 2026 முதல் www.aeoindia.gov.in என்ற இணையதளம் மூலம் சமர்ப்பிக்கலாம் .
மேலும் விவரங்களுக்கு ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2234116®=3&lang=1
***
TV/PLM/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2234166)
வருகையாளர் எண்ணிக்கை : 8