சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் மருந்து மற்றும் மருத்துவ சாதன பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்த வருடாந்திர ஆலோசனை கூட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 28 FEB 2026 4:39PM by PIB Chennai

இந்தியாவில் மருந்தியல் கண்காணிப்பு தொடர்பான கட்டமைப்புக்களை வலுப்படுத்துவது குறித்த இரண்டு நாள் தேசிய வருடாந்திரக் கூட்டம் ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.

இரண்டு நாள் நடைபெற்ற இந்த வருடாந்திரக் கூட்டத்தை, மத்திய சுகாதார அமைச்சகத்தின் இந்திய மருந்தியல் ஆணையம், ஆந்திரப் பிரதேச மருத்துவ தொழில்நுட்ப மண்டலம் இணைந்து, பிப்ரவரி 27-28 ஆகியத் தேதிகளில், ஏற்பாடு செய்திருந்தது.

இந்த தேசிய அளவிலான ஆலோசனைக் கூட்டத்தில், இந்தியாவின் மருந்து மற்றும் மருத்துவ சாதன பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்துவது, ஒழுங்குமுறை அதிகாரிகள், சுகாதார நிறுவனங்கள், ஏடிஆர் மற்றும் மருத்துவ சாதன கண்காணிப்பு மையங்கள் இடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்திய மருந்தியல் கண்காணிப்பு திட்டம் மற்றும் இந்திய பொருள் கண்காணிப்பு திட்டத்தில் பங்கேற்கும் பிராந்திய அளவிலான மையங்களின் முதலாவது வருடாந்திர கூட்டம் இதுவாகும்.

ஒழுங்குமுறை அதிகாரிகள், முன்னணி மருத்துவ நிறுவனங்கள் மற்றும் உலக சுகாதார அமைப்பின் இந்தியாவிற்கான பிராந்திய அலுவலகத்தின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் தொடக்க உரையாற்றிய இந்திய மருந்தியல் ஆணையத்தின் செயலாளர் மற்றும் அறிவியல் இயக்குனருமான டாக்டர் வி கலைசெல்வன், விழிப்புணர்வு சார்ந்த அறிக்கை வெளியிடுவதிலிருந்து செயல்திறன் சார்ந்த மருந்தியல் கண்காணிப்பு கட்டமைப்பிற்கு மாற வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2233933&reg=3&lang=1       

***

TV/SV/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2233977) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी