அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

ஆராய்ச்சி முடிவுகளை நிஜ உலக பயன்பாடுகளாக மாற்றுவதற்கான வழிகள் குறித்த விவாதம் - மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை நடத்தியது

प्रविष्टि तिथि: 28 FEB 2026 4:29PM by PIB Chennai

புது தில்லியின் விஞ்ஞான் பவனில் நடைபெற்ற தேசிய அறிவியல் தின கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் கே. சூட் தலைமை வகித்தார்.  நிகழ்ச்சியில் பேசிய அவர் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்க அறிவியலுடன் கொள்கை ஒருங்கிணைப்பு அவசியம் என்று அவர் கூறினார்.

"அறிவியலில் பெண்கள்" என்ற மையக் கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கொண்டாட்டத்தில் மூன்று உரை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. அதைத் தொடர்ந்து அறிவியலுக்கும் கொள்கை ஒருங்கிணைப்புக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு குறித்த குழு விவாதம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இந்தியாவின் அறிவியல் சூழல் அமைப்பை வலுப்படுத்துவது குறித்து கொள்கை வகுப்பாளர்கள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் விவாதித்தனர். ஆராய்ச்சி முடிவுகளை நிஜ உலக பயன்பாடுகளாக மாற்றுவதற்கான வழிகள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது.

இந்தியா தனது நீண்டகால வளர்ச்சி இலக்குகளை நோக்கி முன்னேறும்போது, ​​அறிவியலுக்கும் கொள்கைக்குமான ஒருங்கிணைப்பை ஆழப்படுத்துதல், நிறுவன ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், அறிவியலில் பொதுமக்கள் ஈடுபாட்டை மேம்படுத்துதல் என்ற கூட்டுத் தீர்மானத்துடன் இந்த நிகழ்வு நிறைவடைந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2233927&reg=3&lang=1      

***

TV/PLM/RK


(रिलीज़ आईडी: 2233973) आगंतुक पटल : 73
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी