நித்தி ஆயோக்
azadi ka amrit mahotsav

முன்னேற்றத்தை விரும்பும் வட்டாரங்களில் 50 பயிலரங்குகளை நடத்தியது நித்தி ஆயோக்

இடுகை இடப்பட்ட நாள்: 28 FEB 2026 12:42PM by PIB Chennai

நிதி ஆயோக், 2026 பிப்ரவரி 27 அன்று, முன்னேற்றத்தை விரும்பும் மாவட்டங்கள் மற்றும் வட்டாரங்கள் திட்டத்தின் கீழ், எல்லைப்புற 50 பயிலரங்குகளை நடத்தியது. இது பொதுக் கொள்கையில் டிஜிட்டல் நிர்வாகத்திலிருந்து அறிவார்ந்த செயற்கை நுண்ணறிவு நிர்வாகத்திற்கு மாறும் மாற்றத்தைக் குறிக்கிறது. இந்த பயிலரங்கில், நித்தி ஆயோக்கின் தலைமைச் செயல் அதிகாரி திருமதி நிதி சிப்பர், அறிவியல்- தொழில்நுட்பத் துறை செயலாளர் பேராசிரியர் அபய் கரண்டிகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தியாவின் வளர்ச்சி, மாவட்ட வாரியாக நிகழ்கிறது என்பதை தொடக்க அமர்வு எடுத்துக் காட்டியது. தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த பாரதத்தின் முக்கிய அம்சம், தேசிய தரநிலைகள், 29 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் பல்வேறு திட்டங்களில் தொழில்நுட்பப் பயன்பாடு உள்ளிட்டவை குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது.

போஷான் அபியான், ஜல் ஜீவன், டிஜிட்டல் வேளாண் இயக்கம் போன்றவை குறித்து விவாதங்கள் நடைபெற்றன. மாவட்டங்கள் தங்கள் மாவட்டங்கள் மற்றும் வட்டங்களில் உள்ள சவால்களை நிவர்த்தி செய்வதில் தொழில்நுட்பம் சார்ந்த தலையீடுகளை முன்வைக்க இது ஒரு வாய்ப்பாகவும் அமைந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2233851&reg=3&lang=1  

***

TV/PLM/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2233897) வருகையாளர் எண்ணிக்கை : 17
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati