நிதி அமைச்சகம்
மத்திய அரசின் கணக்குகள் குறித்த ஜனவரி (2025-26 நிதியாண்டு) மாதத்திற்கான மாதாந்திர ஆய்வறிக்கை
प्रविष्टि तिथि:
27 FEB 2026 4:54PM by PIB Chennai
மத்திய அரசின் மாதாந்திர கணக்குகள் ஒருங்கிணைக்கப்பட்டு ஜனவரி 2026-க்கான மதிப்பீட்டு அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு.
ஜனவரி 2026 உடன் முடிவடைந்த மாதத்தில் மத்திய அரசின் வருவாய் 27,08,654 கோடி ரூபாயாகும். இது 2025-26-ம் ஆண்டுக்கான மொத்த வருவாயில் வருவாயின செலவினங்களில் 79.5 சதவீதமாகும். இதில் வரிவருவாயாக 20,94,218 கோடி ரூபாயும், (மத்திய அரசுக்கான நிகர வருவாய்) வரியல்லாத வருவாயாக 5,57,307 கோடி ரூபாயாகும். கடன் அல்லாத மூலதன வருவாயாக 57,129 கோடி ரூபாயும் அடங்கும்.
மேலும் 11,39,797 கோடி ரூபாய் மத்திய அரசின் வரிப் பகிர்வாக மாநில அரசுகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 65,588 கோடி ரூபாய் கூடுதலாகும்.
மத்திய அரசின் மொத்த செலவுத் தொகை 36,90,061 கோடி ரூபாயாக உள்ளது. (இது 2025-26-ம் ஆண்டில் வருவாயினச் செலவுகளுடன் ஒப்பிடுகையில் 74.3 சதவீதமாகும்). இதில் 28,47,780 கோடி ரூபாய் வருவாய் கணக்கிலும் 9,42,281 கோடி ரூபாய் மூலதனக் கணக்கிலும் உள்ளது. மொத்த வருவாயின செலவுகளில் 9,88,302 கோடி ரூபாய் கடனுக்கான வட்டியாகவும் 3,54,861 கோடி ரூபாய் முக்கிய திட்டங்களுக்கான மானியமாகவும் உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2233567®=3&lang=1
***
TV/SV/KPG/RK
(रिलीज़ आईडी: 2233705)
आगंतुक पटल : 107