PIB Headquarters
இந்தியாவின் வர்த்தக ஒத்துழைப்பு தொடர்பான நடவடிக்கைகள் உலக அளவிலான ஒருங்கிணைப்பு மற்றும் வளர்ச்சியை வலுப்படுத்துகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
27 FEB 2026 12:27PM by PIB Chennai
உலக அளவிலான வர்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பு நாட்டின் லட்சிய இலக்குகளை எட்டுவதற்கு வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான குறிக்கோள்களை அடைவதற்குமான நடவடிக்கைகளுக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது. கடந்த சில தசாப்தங்களில் வலுவான ஏற்றுமதி நடவடிக்கைகள் சேவைகள் துறையில் சிறப்பான செயல்பாடுகள் விரிவடைந்து வரும் வர்த்தக ஒத்துழைப்புகள் ஆகியவை சர்வதேச சந்தையுடன் இந்தியாவின் ஒருங்கிணைப்பை வலுவடையச் செய்துள்ளது.
பல்வேறு நாடுகளுடனான வர்த்தக ஒத்துழைப்பில் உள்ள பன்முகத்தன்மை உலகளாவிய தென் பகுதி நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. இந்தியா- ஐரோப்பிய யூனியனுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அனைத்து ஒப்பந்தங்களின் தாயாக கருதப்படுகிறது. இங்கிலாந்து, ஓமன், நியூசிலாந்து ஆகிய நாடுகளுடன் 2025-26-ம் நிதியாண்டில் இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த வகையில் இஸ்ரேல் நாட்டுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன.
சர்வதேச அளவில் அதிகரித்து வரும் போட்டித்தன்மை மற்றும் மாறி வரும் புவிசார் சூழலுக்கு ஏற்ப பல்வேறு நாடுகளுடனான வர்த்தக ஒத்துழைப்புகளும் முக்கியத்துவம் பெற்று வருகிறது. தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் இந்தியாவின் வர்த்தக நடவடிக்கைகளை வலுப்படுத்துவதுடன் ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களின் உற்பத்தியையும் விரிவுபடுத்துகிறது. மேம்பட்ட சந்தைப் பயன்பாடு, சேவைத் துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது, வரியில்லாத வர்த்தகத் தடைகளைக் குறைப்பது, முதலீடுகளை ஊக்குவிப்பது, தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மூலம் முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2233417®=3&lang=1
***
TV/SV/KPG/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2233661)
வருகையாளர் எண்ணிக்கை : 9