குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய சிறுதொழில் கழகத்தை 'பிரிவு ஏ' பொதுத்துறை நிறுவனமாகத் தரம் உயர்த்தியது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் அமைச்சகம்

இடுகை இடப்பட்ட நாள்: 26 FEB 2026 6:33PM by PIB Chennai

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் அமைச்சகத்தின்  கீழ் இயங்கும் தேசிய சிறுதொழில் கழகம் (என்எஸ்ஐசி), கடந்த ஏழு தசாப்தங்களாக இந்தியா முழுவதும் சிறு தொழில்களின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றி வருகிறது. இந்நிலையில், இந்திய அரசு பிப்ரவரி 26, 2026 தேதியிட்ட அறிவிக்கையின் மூலம், என்எஸ்ஐசி  பி'  பிரிவிலிருந்து 'பிரிவு ஏ' பொதுத்துறை நிறுவனமாகத் தரம் உயர்த்தியுள்ளது.

திறன் மேம்பாடு, சந்தைப்படுத்தல் உதவி, கடன் வசதி மற்றும் நிதி முதலீடு போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் சிறுகுறு நடுத்தர தொழில்களுக்கு என்எஸ்ஐசிஆதரவு அளிக்கிறது. மேலும், அரசின் பல முக்கியத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் இது ஒரு கூட்டாளியாகச் செயல்படுகிறது. 'பிரிவு ஏ' அந்தஸ்து கிடைப்பதன் மூலம், என்எஸ்ஐசி-ன் மேலாண்மை மற்றும் நிதி அதிகாரங்கள் அதிகரிக்கும்; இது சிறு தொழில்களுக்கு அது வழங்கும் ஆதரவை மேலும் வலுப்படுத்தும்.

2024-25 ஆம் ஆண்டிற்கான பொதுத்துறை நிறுவனங்கள் துறையின்  மதிப்பீட்டில் என்எஸ்ஐசி'சிறந்த'  தரவரிசையைப் பெற்றுள்ளது. இது அந்த நிறுவனத்தின் தொடர்ச்சியான முயற்சிக்குக் கிடைத்த அங்கீகாரமாகும். இப்புதிய அந்தஸ்து, புத்தொழில்  நிறுவனங்கள் மற்றும் சிறு தொழில் முனைவோருக்குத் தேவையான உள்கட்டமைப்புகளை மேம்படுத்தப் பெரிதும் உதவும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2233187&reg=3&lang=2

செய்திவெளியீட்டு எண்2233187

****

TV/VK/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2233299) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी