பாதுகாப்பு அமைச்சகம்
புதுதில்லியில் டிஆர்டிஓ ஏற்பாடு செய்துள்ள இரண்டு நாள் மாநாட்டை பாதுகாப்பு படை தளபதி தொடங்கி வைத்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
26 FEB 2026 7:44PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள மானேக்ஷா மையத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) சார்பில் பிப்ரவரி 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுக்கரு மாநாட்டை பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் அனில் சௌஹான் தொடங்கி வைத்தார். 'கொள்கையிலிருந்து நடைமுறை வரை: தற்காப்புத் திறன் கொண்ட இந்தியாவை உருவாக்குதல்' என்பது இம்மாநாட்டின் கருப்பொருளாகும்.
தொடக்க உரையாற்றிய ஜெனரல் அனில் சௌஹான், பாதுகாப்புத் தொழில்நுட்பங்களில் தற்சார்பு அடைவதில் டிஆர்டிஓ-வின் பங்களிப்பைப் பாராட்டினார். பிரதமரின் உரையை மேற்கோள் காட்டிய அவர், அணுசக்தி மிரட்டல்களுக்கு இந்தியா அஞ்சாது என்று குறிப்பிட்டார். மேலும், மாசுபட்ட சூழலில் செயல்படும் வகையில் உள்நாட்டுத் தொழில்நுட்பங்கள், இலகுரகப் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ராணுவ-சிவில் ஒருங்கிணைப்பு அவசியம் என்று வலியுறுத்தினார்.
டிஆர்டிஓ தலைவர் டாக்டர் சமீர் வி காமத் பேசுகையில், மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மூலம் இந்தியாவை வலுவான நாடாக மாற்ற டிஆர்டிஓ உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்தார். ஆயுதப்படை மருத்துவச் சேவைகள் இயக்குநர் ஜெனரல் ஆர்த்தி சாரின், மருத்துவ மேலாண்மை பயிற்சிக்காக டிஆர்டிஓ மற்றும் ஆயுதப்படை மருத்துவ சேவைகள் பிரிவு (ஏஎப்எம்எஸ்) இணைந்து நடத்தும் 'விகிரண் பிரஹரி' திட்டத்தைப் பாராட்டினார். இம்மாநாட்டின் மூலம் வருங்காலத் தேவைகளுக்கான ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்குமாறு அனைத்துத் தரப்பினரையும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2233229®=3&lang=2
செய்திவெளியீட்டு எண் 2233229
****
TV/VK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2233282)
வருகையாளர் எண்ணிக்கை : 11