பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
தென்கிழக்கு ஆசியாவின் வர்த்தக வழித்தடமாக நாட்டின் வடகிழக்குப் பகுதி வளர்ச்சியடையும் - மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
இடுகை இடப்பட்ட நாள்:
26 FEB 2026 5:22PM by PIB Chennai
திரிபுரா மாநிலம் செபாஹிஜாலாவில் மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய பணியாளர் நலன் மற்றும் ஓய்வூதியத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று தலைமை வகித்தார்.
கூட்டத்தில் உரையாற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், வடகிழக்கு பகுதி தென்கிழக்கு ஆசியாவின் வர்த்தக வழித்தடமாக வளர்ச்சியடையும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று கூறினார். மாநிலத்தின் பரந்த மூங்கில் வளத்தை ஆராய்ந்து அதை வணிக ரீதியாக சாத்தியமான முறையில் அதிகரிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
திரிபுராவில் மூங்கில் காடுகள் நிறைந்திருந்தாலும், அந்த வளம் போதுமான அளவு பயன்படுத்தப்படாமல் உள்ளது என்று அமைச்சர் கூறினார். அதன் மதிப்பு கூட்டல், பரந்த சந்தை அணுகல் ஆகியவை, திரிபுராவின் வர்த்தக திறனை கணிசமாக மேம்படுத்தி, நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக, மாவட்ட நிர்வாகம் வளர்ச்சி குறித்து விரிவான விளக்கத்தை அமைச்சருக்கு வழங்கியது. முக்கிய கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்கள், உள்கட்டமைப்பு திட்டங்கள், ஜல் ஜீவன் இயக்கம், பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் உள்ளிட்டவற்றை திரு ஜிதேந்திர சிங் ஆய்வு செய்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2233146®=3&lang=1
***
TV/PLM/RK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2233215)
வருகையாளர் எண்ணிக்கை : 11