உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் உணவு பதப்படுத்துதல் துறை முக்கிய பங்கு வகிக்கும் மத்திய அமைச்சர் திரு சிராக் பாஸ்வான்
இடுகை இடப்பட்ட நாள்:
26 FEB 2026 5:19PM by PIB Chennai
நிலையான ஆரோக்கியமான உணவுகள் தொடர்பான சர்வதேச மாநாடு இன்று குண்ட்லியில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் தொடங்கியது. இந்த மூன்று நாள் சர்வதேச மாநாட்டில் 25-ம் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்துறை பிரதிநிதிகள், ஏற்றுமதியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.
தொடக்க அமர்வில் உரையாற்றிய மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள்துறை அமைச்சர் திரு சிராக் பாஸ்வான், பிரதமர் திரு நரேந்திர மோடியின் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்கு பார்வையை நனவாக்குவதில் உணவு பதப்படுத்தும் துறை முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறினார். 140 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டிற்கு, தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சி அவசியம் என்று அவர் தெரிவித்தார். கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க புதுமைகள், ஆராய்ச்சி, நவீன தொழில்நுட்பங்கள் ஆகியவை கிராமப்புறங்களுக்கும் விவசாயிகளுக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
உணவு பொருட்களின் மதிப்பு கூட்டலை அதிகரிக்கவும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், நாட்டை உலகளாவிய உணவு மையமாக நிலைநிறுத்தவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். உலகெங்கிலும் உள்ள ஒவ்வொருவரின் உணவு மேசையிலும் இந்திய உணவுப் பொருட்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்குடன் அரசு செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.
முன்னதாக, மத்திய அமைச்சர் உணவு பதப்படுத்தல் தொடர்பான கண்காட்சியைப் பார்வையிட்டார், மேலும் நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட புதிய தொழில்நுட்பங்கள், தயாரிப்புகள் குறித்து ஆய்வு செய்து கேட்டறிந்தார்.
இந்த மாநாட்டில் 1,000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். அடுத்த மூன்று நாட்களில், முழுமையான அமர்வுகள், முக்கிய உரை நிகழ்ச்சிகள், குழு விவாதங்கள் போன்றவை நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2233143®=3&lang=1
***
TV/PLM/RK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2233211)
வருகையாளர் எண்ணிக்கை : 12