தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

போலியான மருந்துகளின் புழக்கத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகள் என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது

प्रविष्टि तिथि: 26 FEB 2026 4:36PM by PIB Chennai

'இந்தியாவில் போலியான மருந்துகளின் புழக்கத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகள்' என்ற தலைப்பில் புதுதில்லியில் உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வளாகத்தில் விவாதம் நடைபெற்றது.

இந்த வெளிப்படையான விவாத நிகழ்ச்சி, நீதிபதி (டாக்டர்) பித்யுத் ரஞ்சன் சாரங்கி தலைமையில் நடைபெற்றது. இந்தியா போன்ற பரந்த மற்றும் பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் உள்ள பல்வேறு  சவால்களுக்கு உரிய முறையில் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

போலியான, தரமற்ற மருந்துகள் ஏற்படுத்தும் அச்சுறுத்தல்கள், வாழ்வியல், சுகாதார நடைமுறைகளில் ஏற்படுத்தப்படும் நேரடி தாக்கங்கள் போன்ற மனித உரிமை மீறல் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஒருங்கிணைந்த  நடவடிக்கைகள் அவசியம் என்று அவர் கூறினார்.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2233109&reg=3&lang=1

***

AD/SV/RJ/SH


(रिलीज़ आईडी: 2233210) आगंतुक पटल : 58
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी