மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
இணையதள பாதுகாப்பு தொடர்பான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் மொத்தம் ₹ 6.85 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது
प्रविष्टि तिथि:
26 FEB 2026 3:19PM by PIB Chennai
இந்திய தரவு பாதுகாப்பு கவுன்சிலுடன் (DSCI) இணைந்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நடத்திய இரண்டாவது இணையதள பாதுகாப்பு சவாலில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி புதுதில்லியில் நடைபெற்றது. வெற்றியாளர்களை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் திரு எஸ் கிருஷ்ணன் பாராட்டி கௌரவித்தார். இந்த முயற்சி நாட்டின் இணையதள பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்துவதையும், சிறந்த டிஜிட்டல் சூழல் அமைப்பை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
சைபர் செக்யூரிட்டி கிராண்ட் சேலஞ்ச் எனப்படும் இணையதள பாதுகாப்பு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மொத்தம் ₹6.85 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இது நாட்டின் மிக முக்கியமான அரசு ஆதரவிலான இணையதள பாதுகாப்பு கண்டுபிடிப்பு போட்டியில் ஒன்றாகும். முதல் மற்றும் இரண்டாவது இடங்களைப் பிடித்தவர்களுக்கு முறையே ₹50 லட்சம் மற்றும் ₹25 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2233054®=3&lang=1
***
TV/PLM/RK/KR
(रिलीज़ आईडी: 2233167)
आगंतुक पटल : 62