பாதுகாப்பு அமைச்சகம்
நாட்டின் எல்லைப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் உதவுகிறது - பாதுகாப்பு இணையமைச்சர் சஞ்சய் சேத்
இடுகை இடப்பட்ட நாள்:
26 FEB 2026 3:27PM by PIB Chennai
நாட்டின் எல்லைப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகள் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன், அப்பகுதிகளில் வசிக்கும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் உதவிடும் என்று மத்திய பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் தெரிவித்துள்ளார்.
சிக்கிமில் சுங்தாங்-லாச்சென் மற்றும் தாராம் சூ பாலங்களைத் திறந்து வைத்து பேசினார். இந்தப் பாலம் மேகவெடிப்பினால் ஏற்படும் கனமழை போன்ற இயற்கைப் பேரிடர் ஏற்படும் காலங்களில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உதவிடும் என்று கூறினார்.
எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொண்டு வரும் எல்லை சாலைகள் அமைப்பின் தொடர் பணிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். இம்மாநிலத்தில் போக்குவரத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் எல்லைப்புற சாலை அமைக்கும் நிறுவனம் நான்கு முக்கிய பாலங்களை கட்டியதுடன், ஸ்வஸ்திக் திட்டத்தின் கீழ் இரண்டு பாலங்களை சீரமைக்கும் பணியையும் மேற்கொண்டது.
பல்வேறு சரிவுகளுடன் நிலையற்றதாக இருக்கும் இந்த நிலப்பகுதியில் 8 கி.மீ நீளத்திற்கான புதிய சாலைகளை இந்த நிறுவனத்தின் பொறியாளர்கள் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர். இதேபோன்று நாகாத்துங் பகுதியில் கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஏழரை கி.மீ நீளத்திற்கு அமைக்கப்பட்ட சாலைகள் இப்பகுதியில் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2233059®=3&lang=1
***
AD/SV/RJ/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2233166)
வருகையாளர் எண்ணிக்கை : 8