எஃகுத்துறை அமைச்சகம்
கனிமவளப் பயன்பாடு மற்றும் உலோகத்துறையில் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள்
இடுகை இடப்பட்ட நாள்:
26 FEB 2026 10:47AM by PIB Chennai
இந்தியாவின் கனிமவளம் மற்றும் உலோகத்துறையில் எதிர்கால தேவையைக் கருத்தில் கொண்டு ஒரு முக்கிய நடவடிக்கையாக தேசிய கனிமவள மேம்பாட்டு நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், இந்திய தொழில்நுட்பக் கழகம் ஐதராபாத் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐஐடி ஐதராபாத்தின் இயக்குநர் பேராசிரியர் பி எஸ் மூர்த்தியின் முன்னிலையில் அதன் ஆராய்ச்சி மற்றும் ஆலோசனைப் பிரிவின் டீன் மற்றும் தேசிய கனிமவள மேம்பாட்டு நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவின் செயல் இயக்குநர் திரு சஞ்சீவ் ஷாகி ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். கனிமவள பயன்பாடு மற்றும் அதுசார்ந்த துறைகளில் உள்நாட்டுத் தொழில்நுட்ப பயன்பாட்டை மேம்படுத்துவதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
இந்த ஒப்பந்தம் துறை சார்ந்த நிபுணத்துவம் மற்றும் மேம்பட்ட கல்வித்திறன் இடையே வலுவான ஒத்துழைப்பை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. இரும்புத்தாதுவின் நன்மைகள் மற்றும் ஒருங்கிணைப்பு மற்றும் பசுமை எஃகு உற்பத்திக்கான தொழில்நுட்பங்கள், உள்நாட்டு மூலப் பொருட்களின் பயன்பாட்டின் மூலம் மாற்று முறையிலான எஃகு உற்பத்தி, சுரங்க நடைமுறைகள் மற்றும் உலோகவியல் தொடர்பான செயல்முறைகளில் ஆராய்ச்சியை ஊக்குவிக்க உதவிடும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2232945®=3&lang=1
***
AD/SV/RJ/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2233037)
வருகையாளர் எண்ணிக்கை : 10