குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

‘ஒற்றுமை மற்றும் நம்பிக்கையின் வாயிலாக மகாராஷ்டிராவின் பொற்காலம்’ என்ற மாநில அளவிலான பிரச்சாரத்தின் துவக்க விழாவில் குடியரசுத்தலைவர் பங்கேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 25 FEB 2026 8:32PM by PIB Chennai

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள விஸ்வ சாந்தி சரோவரில் இன்று (பிப்ரவரி 25, 2026) பிரம்ம குமாரிகள் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘ஒற்றுமை மற்றும் நம்பிக்கையின் வாயிலாக மகாராஷ்டிராவின் பொற்காலம்’ என்ற மாநில அளவிலான பிரச்சாரத்தின் தொடக்க விழாவில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு, சிறப்புரையாற்றினார்.

 

விழாவில் பேசிய அவர், மகாராஷ்டிரா மாநிலம், அதன் தொழில், விவசாயம், தொழில்முனைவு, புதுமை, உயர்கல்வி மற்றும் விலைமதிப்பற்ற கலாச்சார மரபுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை தொடர்ந்து வலுப்படுத்தி வருவதாகக் கூறினார். ஒவ்வொரு குடிமகனுக்கும் பயனளிக்கும் முழுமையான வளர்ச்சியை நோக்கி நகர்வதே நமது குறிக்கோள் என்றும்,  வரலாற்றிலிருந்து உத்வேகம் பெற்று, நவீன தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் புதுமைகளின் ஆற்றலைப் பயன்படுத்தி, வலுவான மற்றும் வளமான மகாராஷ்டிரா மற்றும் இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதியுடன் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

மனித மாண்புகள் மற்றும் கடமைகள் குறித்து ஆன்மீகம் மக்களிடையே  விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது என்று குடியரசுத்தலைவர் கூறினார். நல்லிணக்கம், நெறிமுறை நடத்தை, நேர்மறையான சிந்தனை மற்றும் சமூகப் பொறுப்பு முதலியவை சமூகத்தை வலுப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார். இத்தகைய மாண்புகள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறும்போது, சமூகத்தில் நம்பிக்கை இயல்பாகவே ஏற்படுவதுடன், பரஸ்பர நம்பிக்கை நேர்மறை போக்கை ஊக்குவிக்கிறது.

 

ஒற்றுமையும், நம்பிக்கையும்தான் ஒரு வலிமையான தேசத்தின் அடித்தளம் என்று குடியரசுத்தலைவர் கூறினார். சமூகத்தில் பரஸ்பர நம்பிக்கை வளரும்போது, மக்கள் தனிப்பட்ட ஆதாயங்களை விட, பொதுவான இலக்கை அடைய ஒன்றிணைந்து செயல்படுவதற்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள். சமத்துவத்தை ஊக்குவித்து, பாகுபாட்டை ஒழித்து, சமூக சேவையில் பங்கேற்பதன் மூலம் ஒவ்வொரு குடிமகனும் தேச கட்டமைப்பில் திறம்பட பங்களிக்க முடியும் என்று குடியரசுத்தலைவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2232856&reg=3&lang=1

 

(Release ID: 2232856)

****

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2232904) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Malayalam