ஆயுஷ்
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு மகாராஷ்டிராவில் தேசிய சுகாதார கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
25 FEB 2026 3:19PM by PIB Chennai
மகாராஷ்டிரா மாநிலம் புல்தாமா மாவட்டத்தில் செங்கோன் தொகுதியில் தேசிய சுகாதார கண்காட்சியை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று தொடங்கி வைத்தார். மத்திய ஆயுஷ் அமைச்சகம் அகில இந்திய ஆயுர்வேத காங்கிரஸுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த நான்கு நாள் கண்காட்சியில் கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள், விவசாயிகள், தொழில்துறை பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்கின்றனர். இந்தக் கண்காட்சி இந்தியாவின் பாரம்பரிய மருத்துவமுறைகளை ஊக்குவிக்கும் தளமாக உள்ளது.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, புனிதத் துறவியான திரு கன்ஜன் மகாராஜின் புனித பூமியில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் பங்கேற்பது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்தக் கண்காட்சியைத் தொடங்கி வைப்பதற்கு முன்னர், அவரது திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்ததாக கூறினார். மக்களின் நலனுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ள அவரது போதனைகள் மனிதகுலத்தின் சமத்துவம் மற்றும் கருணையை எடுத்துரைத்ததாக உள்ளது. ஆன்மீக முக்கயத்துவம் வாய்ந்த இந்த இடத்தில் சுகாதார மற்றும் மக்களின் நலனுக்கான நிகழ்ச்சியை தொடங்கிவைப்பது தமக்கு மிகவும் திருப்தி அளிப்பதாக உள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறினார்.
நமது பாரம்பரியமான ஆரோக்கியமே சுகமான வாழ்வு என்பதன் பொருள், சிறந்த சுகாதாரமே மகிழ்ச்சியை அளிக்கும் என்பதாகும் என்று அவர் கூறினார். சிறந்த உடல் ஆரோக்கியமே அனைத்து கடமைகளையும் செய்வதற்கான முதன்மை கருவியாகும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2232656®=3&lang=1
***
TV/SV/RJ/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2232776)
வருகையாளர் எண்ணிக்கை : 13