பாதுகாப்பு அமைச்சகம்
உத்தராகண்ட் மாநிலம் சௌபாட்டியாவில் இந்தியா - ஜப்பான் கூட்டுப் பயிற்சி 'தர்ம கார்டியன்' தொடங்கியது
இடுகை இடப்பட்ட நாள்:
24 FEB 2026 4:46PM by PIB Chennai
இந்திய ராணுவம் மற்றும் ஜப்பான் தரைவழி தற்காப்புப் படை இடையேயான 7-வது ஆண்டு கூட்டு ராணுவப் பயிற்சியான 'தர்ம கார்டியன்' , உத்தராகண்ட் மாநிலம் சௌபாட்டியாவில் உள்ள வெளிநாட்டுப் பயிற்சி மையத்தில் இன்று தொடங்கியது. இந்தப் பயிற்சி 2026 பிப்ரவரி 24 முதல் மார்ச் 9 வரை நடைபெறவுள்ளது.
இந்த ஆண்டு பயிற்சியில் இரு தரப்பிலிருந்தும் தலா 120 வீரர்கள் பங்கேற்கின்றனர். ஜப்பான் தரப்பில் 32-வது காலாட்படைப் பிரிவினரும், இந்திய ராணுவத் தரப்பில் 'லடாக் ஸ்கவுட்ஸ்' பிரிவினரும் இணைந்துள்ளனர். இந்தியா மற்றும் ஜப்பானில் மாறி மாறி நடத்தப்படும் இந்தப் பயிற்சி, இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் முக்கியத் தூணாகத் திகழ்கிறது.
பாதி-நகர்ப்புறச் சூழலில் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே 'தர்ம கார்டியன்' பயிற்சியின் நோக்கமாகும். அடுத்த இரண்டு வாரங்களுக்கு, வீரர்கள் உடல் தகுதி, கூட்டுத் திட்டமிடல் மற்றும் தந்திரோபாயப் பயிற்சிகளை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்துவர். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இந்தப் பயிற்சி முக்கியத்துவம் பெறுகிறது.
தற்காலிகச் செயல்பாட்டுத் தளங்களை அமைத்தல், உளவு மற்றும் கண்காணிப்பு வலைப்பின்னலை உருவாக்குதல், நடமாடும் வாகனச் சோதனைச் சாவடிகளை அமைத்தல், தேடுதல் நடவடிக்கைகள் மற்றும் ஹெலிகாப்டர் மூலமான ராணுவ நடவடிக்கைகள் போன்றவை இந்தப் பயிற்சியின் முக்கிய அங்கங்களாக இருக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2232191®=3&lang=1
செய்திவெளியீட்டு எண் 2232191
****
TV/VK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2232470)
வருகையாளர் எண்ணிக்கை : 9