புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
தேசிய கணக்கு புள்ளிவிவரங்களுக்கான துணை ஆலோசனை குழுவின் 2022 - 2023 ஆம் ஆண்டிற்கான அறிக்கை வெளியீடு
இடுகை இடப்பட்ட நாள்:
24 FEB 2026 6:43PM by PIB Chennai
தேசிய கணக்கு புள்ளிவிவரங்களின் புதிய தொடருக்கான (அடிப்படை ஆண்டு 2022-23) தரவு ஆதாரங்கள் மற்றும் விகிதாச்சாரங்கள் குறித்த துணைக்குழுவின் அறிக்கையை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. இப்புதிய தொடர் வரும் பிப்ரவரி 27 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது.
புள்ளிவிவரங்களின் துல்லியத்தை மேம்படுத்த இம்முறை ஜிஎஸ்டி தரவுகள் விரிவாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் தனியார் நிறுவனங்களின் வருவாயை மாநில வாரியாகத் துல்லியமாகக் கணக்கிடவும், காலாண்டு புள்ளிவிவரங்களை மேம்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், முறைசாரா துறை நிறுவனங்களுக்கான வருடாந்திர ஆய்வு மற்றும் காலமுறை தொழிலாளர் படை ஆய்வு மூலம் சிறு நிறுவனங்களின் பங்களிப்பு நுணுக்கமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
விவசாயம், கால்நடை மற்றும் மீன்வளத் துறைகளில் உற்பத்தித் திறனைக் கண்டறியப் புதிய தொழில்நுட்ப ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் கட்டுமானத் துறைக்கு எனப் புதிய மாதிரி ஆய்வுகளும் இத்தொடரில் சேர்க்கப்பட்டுள்ளன. நுகர்வுச் செலவினங்கள் மற்றும் முதலீடுகளைக் கணக்கிட 'வாகன்' போன்ற நவீன நிர்வாகத் தரவுகள் பயன்படுத்தப்பட்டிருப்பது, இப்புதிய புள்ளிவிவரத் தொடரின் நம்பகத்தன்மையை மேலும் வலுப்படுத்தும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2232301®=3&lang=1
செய்திவெளியீட்டு எண் 2232301
****
TV/VK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2232466)
வருகையாளர் எண்ணிக்கை : 7