குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
கயானா துணை அதிபர் டாக்டர் பரத் ஜாக்டியோ, குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி ராதாகிருஷ்ணனை சந்தித்தார்
प्रविष्टि तिथि:
23 FEB 2026 5:41PM by PIB Chennai
கயானா துணை அதிபர் டாக்டர் பரத் ஜாக்டியோ குடியரசு துணைத் தலைவர் திரு சி.பி ராதாகிருஷ்ணனை புதுதில்லியில் உள்ள குடியரசு துணைத்தலைவர் மாளிகையில் இன்று சந்தித்தார்.
இச்சந்திப்பின்போது இந்தியா - கயானா இடையே பல்வேறு துறைகளில் உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். யுபிஐ மூலம் மின்னணு நிர்வாகம் மற்றும் நிதி உள்ளடக்கத்தில் இந்தியாவின் விரைவான செயல்பாடுகள் மற்றும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் உறுதியான தலைமைத்துவம் குறித்து டாக்டர் ஜாக்டியோ பாராட்டு தெரிவித்தார்.
இதேபோன்று மின்னணு பொது உள்கட்டமைப்பு மாதிரிகளை கயானாவிலும் விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இருதரப்பினரும் விவாதித்தனர்.
சுகாதார பராமரிப்பு, நிர்வாகம் மற்றும் விருந்தோம்பல் மேலாண்மை, வேளாண் ஆராய்ச்சி மற்றும் இரு நாடுகளுக்கிடையே போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்துவதில் ஒத்துழைப்பு குறித்து விவாதித்தனர்.
அத்துடன் தகவல் தொழில்நுட்பம், நீலப் பொருளாதாரம், எரிசக்தி, விண்வெளி, பாதுகாப்பு, கல்வி, உயிரி பன்முகத்தன்மை பாதுகாப்பு மற்றும் பருவநிலை செயல்பாடு ஆகியவற்றில் கூட்டாண்மைக்கான சாத்தியக் கூறுகள் குறித்தும் தலைவர்கள் ஆராய்ந்தனர்.
***
(Release ID: 2231812)
AD/IR/LDN/SH
(रिलीज़ आईडी: 2231859)
आगंतुक पटल : 43