தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய அஞ்சல் துறை 38 கோடி அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்குகளை கையாளுகிறது; மத்திய அமைச்சர் திரு ஜோதிர் ஆதித்ய சிந்தியா

இடுகை இடப்பட்ட நாள்: 23 FEB 2026 1:26PM by PIB Chennai

ஆந்திரப்பிரதேச வட்டம் அஞ்சல் துறை சார்பில் குண்டூரில் கிராமப்புற அஞ்சல் சேவை முகாம் 2026 பிப்ரவரி 22 அன்று நடைபெற்றது. இதில் 9 ஆயிரத்திற்கும் அதிகமான கிராமப்புற அஞ்சல்துறை பணியாளர்கள் பங்கேற்றனர்.

இம்முகாமில் ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் திரு என் சந்திரபாபு நாயுடு, மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் திரு.ஜோதிர் ஆதித்ய சிந்தியா, இணையமைச்சர் டாக்டர் பெம்மசானி சந்திரசேகர், அஞ்சல் சேவை வாரிய உறுப்பினர் திரு சுவேந்து குமார் ஸ்வைன், குண்டூர் சட்டப்பேரவை உறுப்பினர் திரு முகமது நசீர் அகமது, மேயர் திரு கோவளமுடி ரவீந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் அஞ்சல் சேவை சேமிப்புத் திட்டங்கள், செல்வமகள் சேமிப்புத் திட்டங்கள், அஞ்சல் ஆயுள் காப்பீடு, ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் நேரடி பணப் பரிமாற்றம் ஆகிய சேவைகளில் சிறப்பாக பணிபுரிந்த முதல் பத்து கிராமப்புற அஞ்சல் சேவை பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் திரு ஜோதிர் ஆதித்ய சிந்தியா, இந்திய அஞ்சல் துறை தற்போது சுமார் ரூ.22 லட்சம் கோடி வைப்புத் தொகையுடன் 38 கோடி அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்குகளை கையாண்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும் சுமார் 2.27 லட்சம் கோடி வைப்புத்தொகையுடன் சுமார் 3.8 கோடி செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்குகள் உள்ளதாக கூறினார்.

***

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2231704&reg=3&lang=1

AD/IR/LDN/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2231747) வருகையாளர் எண்ணிக்கை : 101
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu