தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, பிரேசில் தொலைத் தொடர்பு அமைச்சர் திரு ஃபிரடெரிகோ டி சிக்வேரா பில்ஹோவுடன் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
20 FEB 2026 4:32PM by PIB Chennai
மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம். சிந்தியா, பிரேசில் தொலைத் தொடர்பு அமைச்சர் திரு ஃபிரடெரிகோ டி சிக்வேரா பில்ஹோ இடையே இன்று இருதரப்பு சந்திப்பு புதுதில்லியில் இன்று (20.02.2026) நடைபெற்றது. தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உள்கட்டமைப்பு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் முக்கிய நாடுகளாக உள்ள, இரு தரப்பும் நெகிழ்ச்சியான, நம்பகமான, எதிர்காலத்திற்குத் தயாராக உள்ள டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்புகளை வடிவமைப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தன. பிரேசில் குழுவை வரவேற்ற அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, கடந்த 11 ஆண்டுகளாக டிஜிட்டல் உள்கட்டமைப்பை விரிவுபடுத்துதல், உள்ளடக்கிய இணைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றிற்காக மத்திய அரசு மேற்கொண்ட பரந்த அளவிலான முயற்சிகள் குறித்து பிரேசில் தரப்பிற்கு விளக்கினார். உலக அளவில் மிகக் குறைந்த தரவு கட்டணங்களை வழங்குவதில் இந்தியாவின் சாதனையை அவர் எடுத்துரைத்தார்.
இந்தியா மற்றும் பிரேசில் போன்ற புவியியல் ரீதியாக பரந்த நாடுகளில் தொலைத் தொடர்பு இணைப்பை விரிவுபடுத்துவது ஒரு கடமை என்பதை இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். உலகின் மிகப்பெரிய கிராமப்புற கண்ணாடி இழை திட்டங்களில் ஒன்றான பாரத்நெட் திட்டத்தின் முன்னேற்றத்தை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா சுட்டிக் காட்டினார்.
இரு தரப்பினரும் அதிகாரிகள் நிலையிலான ஆலோசனைகள், கூட்டு செயல் திட்டத்தை உருவாக்குதல் போன்றவை மூலம் இருதரப்பு ஈடுபாட்டைத் தீவிரப்படுத்த ஒப்புக்கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2230736®=3&lang=1
***
TV/PLM/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2230916)
வருகையாளர் எண்ணிக்கை : 10