நிதி அமைச்சகம்
மத்திய அரசு ஊழியர்களின் நிதிப்பாதுகாப்பை வலுப்படுத்துவதில் அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
19 FEB 2026 3:41PM by PIB Chennai
மத்திய அரசு ஊழியர்களின் நிதிப் பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான சேவைகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய நிதிசார் சேவைகள் துறை மற்றும் பொதுத் துறை வங்கிகள் ஒன்றிணைந்து பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தில்லியில் கடந்த 17-ம் தேதி பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகாமில் நிதிசார் சேவைகள் துறை மற்றும் பல்வேறு வங்கிகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய நிதிசார் சேவைகள் துறைச் செயலாளர் திரு நாகராஜூ வங்கி சார்ந்த நடவடிக்கைகளில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காண்பதில் பிற வங்கிகளுடன் ஒன்றிணைந்து பஞ்சாப் நேஷனல் வங்கி மேற்கொண்டு வரும் முன்முயற்சிகளுக்கு பாராட்டுத் தெரிவித்தார். பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள மத்திய அரசுப் பணியாளர்களுக்கான சம்பள வங்கிக் கணக்குத் தொகுப்பு உட்பட பல்வேறு பயன்களை பெறும் வகையில், இது போன்ற முகாம்களில் மத்திய அரசு ஊழியர்கள் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
வங்கிச் சேவைகள், காப்பீடு மற்றும் கடன் அட்டைகள் என 3 அம்சங்களையும் ஒரே இடத்தில் மத்திய அரசுப் பணியாளர்களுக்கு கிடைக்கும் வகையில் இது போன்ற முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும் எவ்விதச் சேவைக் கட்டணமும் இல்லாத ஆர்டிஜிஎஸ் / என்இஎஃப்டி /யுபிஐ உள்ளிட்ட பணப்பரிமாற்ற வசதிகள், பாதுகாப்பு பெட்டகத்திற்கான சலுவை அடிப்படையிலான கட்டணங்கள், கடன் வசதிகளுக்கான குறைந்த அளவு செயல்பாட்டுக் கட்டணங்கள், தனிநபர் விபத்துக் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இதில் அடங்கும்
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2230219®=3&lang=1
****
TV/SV/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2230494)
வருகையாளர் எண்ணிக்கை : 8