வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தமிழ்நாட்டிலிருந்து கனடாவிற்கு புவிசார் குறியீடு கொண்ட சேலம் ஜவ்வரிசி முதல் முறையாக ஏற்றுமதி

இடுகை இடப்பட்ட நாள்: 19 FEB 2026 5:47PM by PIB Chennai

மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (அபேடா - APEDA), சேலத்திலிருந்து கனடாவிற்கு 0.5 மெட்ரிக் டன் புவி சார் குறியீடு பெற்ற சேலம் ஜவ்வரிசியை ஏற்றுமதி செய்ய உதவியுள்ளது. மார்ச் 2023-ல் சேலம் ஜவ்வரிசி புவிசார் குறியீடு பெற்ற பிறகு நேரடியாக அனுப்பப்படும் முதல் ஏற்றுமதி இதுவாகும். 

 

சபுதானா என்றும் அழைக்கப்படும் மரவள்ளிக்கிழங்கு சவ்வூடு பயிரில் தமிழ்நாடு மிகப்பெரிய உற்பத்தி மாநிலமாக உள்ளது. சேலம் பகுதி, நீண்ட காலமாக நாட்டின் இதன் மையமாக உள்ளது. இது இந்தியாவின் பல பகுதிகளில் ஒரு முக்கிய உணவாகப் பயன்படுகிறது.

 

சேலத்தில் ஜவ்வரிசி தொழில், மரவள்ளிக்கிழங்கு சாகுபடியில் ஈடுபட்டுள்ள பழங்குடி சமூகங்கள் உட்பட ஏராளமான விவசாயிகளுக்குப் பெரிதும் பயனளிக்கிறது. புவிசார் குறியீடு சான்றளிக்கப்பட்ட இதை நேரடி ஏற்றுமதி வாய்ப்புகளுடன் இணைப்பதன் மூலம், மரவள்ளிக்கிழங்கு சாகுபடியை நம்பியுள்ள விவசாய குடும்பங்களுக்கு வருமான வாய்ப்புகள் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

 

பாரம்பரியமாக, சேலம் ஜவ்வரிசி மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், மேற்கு வங்காளத்தில் உள்ள வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்டு, அங்கிருந்து அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, வியட்நாம், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

 

இந்நிலையில் 2026 பிப்ரவரி 18 அன்று தமிழ்நாட்டின் சேலத்தில் உள்ள சேலம் ஸ்டார்ச் மற்றும் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் சேவை தொழில்துறை கூட்டுறவு சங்க லிமிடெட் (SAGOSERVE) வளாகத்தில் ஏற்றுமதி தொடர்பான ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது.

 

இந்த முயற்சி, புவி சார் குறியீடு செய்யப்பட்ட தயாரிப்புகளை ஊக்குவித்தல், உற்பத்தியாளர் சங்கங்கள் மற்றும் சர்வதேச அளவில் விற்பவர் - வாங்குபவர்களுக்கு இடையே நேரடி சந்தை இணைப்புகளை செயல்படுத்துதல், விவசாய ஏற்றுமதிகளை விரிவுபடுத்துதல் போன்ற அபேடா-வின் உத்திகளுக்கு ஏற்ப அமைந்தது. இதுபோன்ற இன்னும் பல ஏற்றுமதிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2230307&reg=3&lang=1

(Release ID: 2230307)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2230412) வருகையாளர் எண்ணிக்கை : 19
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी