பிரதமர் அலுவலகம்
ஏஐ தாக்க உச்சிமாநாட்டிற்கு இடையே ஃபின்லாந்து பிரதமர் திரு பெட்டேரி ஆர்போவை பிரதமர் சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
18 FEB 2026 5:10PM by PIB Chennai
செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டிற்கு இடையே பிரதமர் திரு நரேந்திர மோடி, ஃபின்லாந்து பிரதமர் திரு பெட்டேரி ஆர்போவை புதுதில்லியில் 2026 பிப்ரவரி 18 அன்று சந்தித்தார்.
அப்போது அண்மையில் 16-வது இந்திய – ஐரோப்பிய யூனியன் உச்சிமாநாட்டின் போது இந்திய – ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது குறித்து இருதலைவர்களும் வரவேற்பு தெரிவித்தனர்.
இந்திய – ஐரோப்பிய யூனியன் உத்திசார் கூட்டாண்மை உணர்வுடன் இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடர்வதற்கு அவர்கள் உறுதிபூண்டனர். எதிர்கால பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் மின்னணுமயமாக்கல் மற்றும் நிலைத்தன்மையின் முக்கியப் பங்களிப்புக் குறித்து தலைவர்கள் சுட்டிக்காட்டினார்கள். விரிவுபடுத்தப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் கூட்டாண்மை மூலம் இருதரப்பு பொருளாதாரத்தில் தங்களது முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரித்து வருவது குறித்து அவர்கள் குறிப்பிட்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2229685®=3&lang=1
***
AD/IR/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2229841)
வருகையாளர் எண்ணிக்கை : 39
இந்த வெளியீட்டை படிக்க:
Gujarati
,
Kannada
,
Malayalam
,
English
,
Urdu
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Odia
,
Telugu