எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav AI Impact Summit 2026

ஏஐ தாக்க உச்சிமாநாடு 2026-ல் மின்சார அமைச்சக அரங்கத்தை மின்சாரத் துறை அமைச்சர் திரு மனோகர் லால் திறந்து வைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 18 FEB 2026 3:51PM by PIB Chennai

மத்திய மின்சாரத் துறை அமைச்சர் திரு. மனோகர் லால் இன்று பாரத மண்டபத்தில் நடைபெறும் ஏஐ தாக்க உச்சிமாநாடு 2026-ல் மின்சார அமைச்சகத்தின் அரங்கத்தைத் திறந்து வைத்தார். எதிர்காலத்திற்குத் தயாரான, திறமையான மற்றும் மீள்திறன் கொண்ட மின்சாரத் துறையை உருவாக்க செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை அவர் இதன் மூலம் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

"மெகாவாட் முதல் மெகாபைட் வரை: இந்தியாவின் மின் சூழலமைப்பை மாற்றுதல்" என்ற கருப்பொருளின் கீழ், மின்சாரத் துறையின் எதிர்காலத்தை நோக்கிய பார்வையை இந்த அரங்கு வழங்குகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோக அமைப்புகளை எவ்வாறு மறுவடிவமைப்பு செய்கின்றன என்பதையும் இது எடுத்துக்காட்டுகிறது.

அடிப்படை கட்டமைப்பின் நம்பகத்தன்மையை வலுப்படுத்தவும், செயல்திறனை மேம்படுத்தவும், மின்சாரத் துறையில் நிலையான வளர்ச்சியை ஆதரிக்கவும் அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் அமைச்சகத்தின் கவனத்தை இந்த அரங்கு பிரதிபலிக்கிறது.

ஏஐ தாக்க உச்சிமாநாட்டில் தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் அமைத்திருந்த கண்காட்சியையும் அமைச்சர் பார்வையிட்டார். ஏஐ தொழில்நுட்பம் வாடிக்கையாளர் குறைகள் மற்றும் பயணிகள் தொடர்பான பிரச்சினைகளை விரைவாகத் தீர்க்க உதவும் என்று டிஎம்ஆர்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2229607&reg=3&lang=1

***

AD/PKV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2229837) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati