PIB Headquarters
azadi ka amrit mahotsav

வேவ்ஸ் 2025 - உலகளாவிய பங்கேற்பு மற்றும் படைப்பாற்றலில் ஒத்துழைப்பு மூலம் வளர்ச்சியை துரிதப்படுத்துதல்

இடுகை இடப்பட்ட நாள்: 18 FEB 2026 11:41AM by PIB Chennai

வேவ்ஸ் 2025 எனப்படும் உலக ஒலி, ஒளி பொழுதுபோக்கு உச்சி மாநாடு ஒரு எளிய ஆனால் லட்சியம் மிக்க யோசனையுடன் தொடங்கியது. உலகம் முழுவதிலுமிருந்து படைப்பு குரல்களை ஒரே கூட்டு தளத்தில் ஒன்றிணைப்பதே அதன் நோக்கம். மே 1, 2025 முதல் மே 4 , 2025 வரை, மும்பையில் இது நடைபெற்றது. அதில் கதைகளை உருவாக்குபவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், படைப்பாற்றல் தொழில்துறை தலைவர்கள் என அனைவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள மட்டுமல்லாமல், அர்த்தமுள்ள ஒத்துழைப்பை உருவாக்கவும் ஒன்றிணைந்தனர். ஊடகம், பொழுதுபோக்கு தொடர்பான ஒரு பாரம்பரிய உச்சிமாநாட்டின் வடிவத்திற்கு அப்பால் இது, படைப்பாளிகள், சந்தைகள், யோசனைகள், நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இடையே ஒரு உயிரோட்டமுள்ள இணைப்பாக செயல்பட்டது.

வேவ்ஸ் உச்சி மாநாட்டின் நோக்கம் தெளிவாக இருந்தது. உள்ளடக்க உருவாக்கம், படைப்பாற்றல் தொழில்நுட்பம், அறிவுசார் சொத்துரிமை, சந்தை அணுகல் ஆகியவற்றில் வாய்ப்பை உருவாக்கி, உலகளாவிய படைப்பாற்றல் சூழல் அமைப்புகளை இணைப்பதே இதன் நோக்கம். 100 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த கொள்கை வகுப்பாளர்கள், உலகளாவிய ஸ்டுடியோக்கள், புத்தொழில் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், படைப்பாளிகள் உட்பட பலர் இதில் பங்கேற்றனர். 

உலகளாவிய ஊடக, பொழுதுபோக்குச் சூழல் அமைப்பின் பல அம்சங்களை ஒரே தளத்திற்குக் கொண்டுவருவதன் மூலம், இந்த உச்சிமாநாடு பல்வேறு துறை தொடர்பு, கொள்கை சீரமைப்பு, வணிகப் பரிமாற்றம் ஆகியவற்றைச் செயல்படுத்தியது. இது உலக அளவில் படைப்புத் தொழில்களின் அதிகரித்து வரும் ஒன்றிணைந்த தன்மையைப் பிரதிபலிக்கிறது.

3,000க்கும் மேற்பட்ட சந்திப்புகளை எளிதாக்கி, 800 கோடிக்கும் அதிகமான வணிக பரிவர்த்தனைகளை இந்த மாநாடு உருவாக்கியது. உச்சிமாநாட்டிற்கு அப்பால் பேச்சுவார்த்தைகள் முன்னேறும்போது ஒப்பந்த மதிப்பு 1,000 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாங்குபவர்–விற்பனையாளர் சந்தை மட்டும் 500 கோடிக்கும் அதிகமான வருவாயை ஈட்டியது. 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2229463&reg=3&lang=1

----

(Release ID: 2229463) 

AD/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2229805) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Gujarati