ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பெண்கள் தலைமையிலான நிறுவனங்களில் பொது கொள்முதல் குறித்த தேசிய பயிலரங்கம் புதுதில்லியில் நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 18 FEB 2026 11:03AM by PIB Chennai

மத்திய அரசின் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் (MoRD) தீனதயாள் அந்த்யோதயா திட்ட - தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கம், பிசிஐ இந்தியா அமைப்புடன் இணைந்து, "பொது கொள்முதல் மூலம் பெண்கள் தலைமையிலான நிறுவனங்களை மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் ஒரு தேசிய பயிலரங்கை நேற்று (பிப்ரவரி 17, 2026) அன்று புது தில்லியில் ஏற்பாடு செய்தது. இந்தப் பயிலரங்கம், மாநில கிராமப்புற வாழ்வாதாரத் திட்டங்கள், முக்கிய அமைச்சகங்கள், மேம்பாட்டு அமைப்புகள், தொழில்துறையினர் உள்ளிட்டோரை ஒன்றிணைத்து, பொது கொள்முதல் அமைப்புகளில் சுய உதவிக்குழுக்களின் வெற்றிகரமான பங்களிப்புகளைக் காட்சிப்படுத்தியது. பெண்கள் தலைமையிலான நிறுவனங்கள் அரசு விநியோகச் சங்கிலிகளில் பங்கேற்கும் வழிகளை வலுப்படுத்துவதில் இந்த நிகழ்வு கவனம் செலுத்தியது. இதில் சிறப்பு உரையை நிகழ்த்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர் திரு சைலேஷ் குமார் சிங், பெண்களுக்குப் பொருளாதார அதிகாரமளித்தல் என்பது நலத்திட்டம் அல்ல எனவும் அது இந்தியாவின் வளர்ச்சி, சமூக நிலைத்தன்மை ஆகியவற்றில் ஒரு முதலீடு என்றும் கூறினார்.

சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகள், சேவைகளை பொது கொள்முதல் அமைப்புகளுடன் இணைப்பது இப்போது ஒரு முன்னுரிமையாக உள்ளது என்று ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கிராமப்புற வாழ்வாதார இயக்க கூடுதல் செயலாளர் திரு. டி.கே. அனில் குமார் கூறினார். இந்த பயிலரங்கம் கூட்டு நடவடிக்கைகளை ஊக்குவித்தல், பெண்களின் பொருளாதார அதிகாரமளிப்பை விரைவுபடுத்துதல், அரசு கொள்முதல் சூழல் அமைப்புகளுக்குள் சுய உதவிக் குழுக்களை நம்பகமான விநியோகஸ்தர்களாக நிலைநிறுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2229449&reg=3&lang=1

***

AD/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2229799) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी