சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறுபான்மையினர் நல அமைச்சகம் சார்பில் பீகார் ராஜ்கிரில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தில் 2 நாட்கள் சிந்தனை அமர்வு நடைபெறுகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 18 FEB 2026 11:45AM by PIB Chennai

பீகார் மாநிலம் ராஜ்கிரில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தில்  2026 பிப்ரவரி 18-19 ஆகிய இரண்டு நாட்கள் சிந்தனை அமர்வுக்கு மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.  இதில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ, இணையமைச்சர் திரு ஜார்ஜ் குரியன், பல்வேறு மாநிலங்களின் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறுபான்மையினர் சமூகத்தைப் பாதிக்கும் முக்கிய விவகாரங்கள், அவர்களுடைய சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கான நடவடிக்கைகள் திட்டமிடல் ஆகியவை குறித்து விவாதிக்க உள்ளனர்.

சிறுபான்மையினர் நலனுக்கான உள்கட்டமைப்பு மேம்பாடு, சமூக பொருளாதார அதிகாரம் அளித்தல், வக்ஃப் மேலாண்மை, ஹஜ் மேலாண்மை போன்றவை தொடர்பாக இந்த சிந்தனை அமர்வில் விவாதங்கள் நடைபெற உள்ளன. பிப்ரவரி 19 அன்று சிறுபான்மையினர் நலத்திட்டங்களை கண்காணித்தல் மற்றும்  வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்காக மொபைல் செயலி, ஹஜ் யாத்ரீகர்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்வதற்காக ஹஜ் சுவிதா நவீன மணிக்கட்டுப் பட்டை, உள்ளிட்ட நவீன முன்முயற்சிகள் தொடங்கப்பட உள்ளன.

யோகா அமர்வு, மத்திய – மாநில அமைச்சர்கள் பங்கேற்கும் தொடக்க நிகழ்ச்சி ஆகியவை நடைபெற உள்ளது. குழு விவாதங்கள், கொள்கை  மற்றும் திட்டங்களின் மேம்பாட்டுக்காக செயல்படுத்தக் கூடிய பரிந்துரைகளை உருவாக்குதல் ஆகியவையும் நடைபெறவுள்ளன.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2229466&reg=3&lang=1

***

AD/IR/KPG/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2229566) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी