எஃகுத்துறை அமைச்சகம்
இந்தியா ஏஐ தாக்க உச்சிமாநாட்டில் எஃகுத் தொழிலுக்கான நடைமுறைக்கு உகந்த, செயல்படுத்தக்கூடிய புதுமைகளை உருவாக்குவதில் ஒத்துழைக்க, ஏஐ புத்தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு
प्रविष्टि तिथि:
17 FEB 2026 3:30PM by PIB Chennai
மத்திய எஃகு அமைச்சகம், அதன் மத்திய பொதுத்துறை நிறுவனங்களுடன் (சிபிஎஸ்இ) இணைந்து, புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 16 முதல் 20 பிப்ரவரி 2026 வரை நடைபெறும் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டில் பங்கேற்கிறது.
சுரங்கம் மற்றும் எஃகுத் துறைகளின் முக்கியப் பிரச்சனை அறிக்கைகளை வழங்குவதற்காக, இந்த மாநாட்டில் அமைச்சகம் ஒரு பிரத்யேக அரங்கை அமைத்துள்ளது. இந்த முயற்சி, எஃகு மதிப்புச் சங்கிலி முழுவதும் செயல்திறன், உற்பத்தித்திறன், நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நடைமுறை மற்றும் பயனுள்ள தீர்வுகளை உருவாக்க, செயற்கை நுண்ணறிவு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் புதுமையாளர்களை அழைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த முயற்சி, இந்தியாவின் தொழில்துறை மாற்றத்தை விரைவுபடுத்த, தொழில்நுட்பத் தலைமையை வலுப்படுத்த மற்றும் புதுமை வழி வளர்ச்சியை ஊக்குவிக்க செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு உகந்ததாகும்.
இந்தத் தளத்தின் மூலம், எஃகுத் துறை எதிர்கொள்ளும் நிஜ உலக சவால்களைச் சமாளிக்க, தொழில் பங்குதாரர்களுக்கும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் இடையே அர்த்தமுள்ள கூட்டாண்மைகளை உருவாக்க அமைச்சகம் முயல்கிறது.
இந்த உரையாடலில் தீவிரமாகப் பங்கேற்கவும், இந்தத் துறைக்கான தீர்வுகளை உருவாக்குவதில் ஒத்துழைக்கவும் எஃகு அமைச்சகம் ஏஐ புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் புதுமைப் படைப்பாளர்களை வரவேற்கிறது. இத்தகைய கூட்டாண்மைகள், தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட, புதுமைகளை முன்னெடுக்கும் மற்றும் தன்னம்பிக்கையான இந்தியாவின் பரந்த தொலைநோக்குப் பார்வைக்கு பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துறை சார்ந்த சவால்களைச் சமாளிக்க உதவும் வகையில், தங்களின் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தீர்வுகளை முன்வைத்து, இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு வழிநடத்தும் எஃகுத் துறை மாற்றத்தில் கூட்டாளர்களாக மாறும்படி புதுமைப் படைப்பாளர்களை அமைச்சகம் ஊக்குவிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2229109®=3&lang=1
****
TV/PKV/SH
(रिलीज़ आईडी: 2229307)
आगंतुक पटल : 53