தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
தொலைத்தொடர்பு, வளர்ந்து வரும் டிஜி்ட்டல் தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பது குறித்து இந்தியா - அயர்லாந்து பிரதிநிதிகள் பேச்சு நடத்தினார்கள்
இடுகை இடப்பட்ட நாள்:
17 FEB 2026 4:38PM by PIB Chennai
மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா தலைமையிலான இந்திய பிரதிநிதிகள் குழு அயர்லாந்தின் பொதுச் செலவினம், உள்கட்டமைப்பு, பொதுச்சேவை சீர்திருத்தத்துறை அமைச்சர் திரு ஜாக் சாம்பர்சுடன் இருதரப்பு சந்திப்பு நடத்தியது. புதுதில்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பில், தொலைத்தொடர்பு செயலாளர் திரு அமீத் அகர்வால் மற்றும் உயர் அதிகாரிகள் இந்தியாவுக்கான அயர்லாந்து தூதர் திரு கெவின் கெல்லி மற்றும் அயர்லாந்தின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்பின் போது தொலைத்தொடர்புத்துறை டிஜிட்டல் உள்கட்டமைப்பு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், இருநாடுகளுக்கு இடையேயான நட்புறவை வலுப்படுத்துதல் குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது பேசிய அமைச்சர் திரு சிந்தியா, குவாண்டம் தொலைத்தொடர்பு, செயற்கை நுண்ணறிவு, புதுமைக் கண்டுபிடிப்பு ஒழுங்குமுறை மற்றும் ஊரகப்பகுதிகளில் அகண்ட அலைவரிசை சேவைகள் ஆகியவற்றில் இணைந்து செயல்படுவதற்கான பெரும் சாத்தியக்கூறுகளை இந்தியாவும் அயர்லாந்தும் கொண்டுள்ளதாக தெரிவித்தார். சர்வதேச தொலைத்தொடர்பு யூனியனில் இந்தியா உறுப்பினராவதற்கு அயர்லாந்தின் ஆதரவை இந்தியா எதிர்நோக்கியுள்ளதாக அமைச்சர் திரு சிந்தியா குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2229144®=3&lang=1
***
AD/IR/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2229257)
வருகையாளர் எண்ணிக்கை : 8