மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav AI Impact Summit 2026

இந்தியாவில் செயற்கை நுண்ணறிவின் (AI) எல்லையை விரிவுபடுத்துதல்: கல்வி அமைச்சகத்தின் சிறப்பு அமர்வு

இடுகை இடப்பட்ட நாள்: 16 FEB 2026 6:51PM by PIB Chennai

டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் 'இந்தியா ஏஐ தாக்கம் உச்சிமாநாடு 2026' நிகழ்வில், "கல்வி அமைச்சகம் – இந்தியாவில் ஏஐ-இன் எல்லையை விரிவுபடுத்துதல்" என்ற தலைப்பில் சிறப்பு அமர்வு பிப்ரவரி 17 அன்று நடைபெறுகிறது.

மத்திய கல்வி அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் மற்றும் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. ஜெயந்த் சவுத்ரி ஆகியோர் இதில் பங்கேற்கின்றனர். தேசிய கல்விக் கொள்கை 2020 மற்றும் 'வளர்ச்சியடைந்த இந்தியா 2047' இலக்குகளின்படி, கல்வி முறையில் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைப்பதே இதன் நோக்கமாகும்.

இதன் ஒரு பகுதியாக, சென்னை ஐஐடியில் கல்விக்கான 'ஏஐ சிறப்பு மையம்' அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், கல்வித் துறையில் பணியாற்றும் புத்தொழில்  நிறுவன நிறுவனர்களுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டன. இந்த அமர்வில் ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவனர் திரு. ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்ட கல்வி மற்றும் தொழில் துறை வல்லுநர்கள் பங்கேற்று, AI மூலம் கல்வித்தரத்தை மேம்படுத்துவது குறித்து விவாதிக்க உள்ளனர்.

இந்த நிகழ்வை நேரலையில் காண: https://www.youtube.com/live/WHsBKKrczHU?si=0Dr5hS2nNH3r3ulT

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2228802&reg=3&lang=1

 வெளியிட்டு அடையாள எண் : 2228802

****

TV/VK/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2228909) வருகையாளர் எண்ணிக்கை : 78
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी