நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

"ரூபே கடன் அட்டை மற்றும் குறைந்த மதிப்புள்ள பீம்-யுபிஐ பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கான ஊக்கத் திட்டத்தின் சமூக-பொருளாதார தாக்க பகுப்பாய்வு" என்ற தலைப்பிலான அறிக்கையை நிதிச் சேவைகள் துறை வெளியிட்டது.

இடுகை இடப்பட்ட நாள்: 16 FEB 2026 2:44PM by PIB Chennai

நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை, பிப்ரவரி 13-14, 2026 அன்று நடைபெற்ற சிந்தனை முகாமின் போது, "ரூபே கடன் அட்டை மற்றும் குறைந்த மதிப்புள்ள பீம்-யுபிஐ  பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கான ஊக்கத் திட்டத்தின் சமூக-பொருளாதார தாக்க பகுப்பாய்வு" என்ற தலைப்பிலான ஒரு அறிக்கையை வெளியிட்டது.

இந்த ஆய்வு, இந்திய தேசிய பரிவர்த்தனைக் கழகத்துடன் கலந்தாலோசித்து, ஒரு சுயாதீனமான மூன்றாம் தரப்பு ஆராய்ச்சி நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பது, கட்டண உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது மற்றும் நாடு முழுவதும் நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துவதில் அரசின் ஊக்குவிப்பு கட்டமைப்பின் செயல்திறனை இந்த பகுப்பாய்வு மதிப்பிடுகிறது.

அறிக்கையின்படி ஊக்குவிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்ட காலத்தில் டிஜிட்டல் பணம் செலுத்துதல் மற்றும் உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க விரிவாக்கம் காணப்பட்டது. டிஜிட்டல் பரிவர்த்தனைகள் கிட்டத்தட்ட 11 மடங்கு அதிகரித்துள்ளதுடன், மொத்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் யுபிஐ-இன் பங்கு ஏறத்தாழ 80% ஆக உயர்ந்து, அதை முதன்மை பணம் செலுத்தும் பாதையாக நிறுவியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2228651&reg=3&lang=1

(Release ID: 2228651)

****

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2228897) வருகையாளர் எண்ணிக்கை : 103
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati