பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடற்படை, ராணுவத் தளவாட உற்பத்தியில் தர உத்தரவாதம் குறித்த மாநாடு புதுதில்லியில் நடைபெற உள்ளது

प्रविष्टि तिथि: 12 FEB 2026 11:59AM by PIB Chennai

கடற்படை மற்றும் ராணுவத் தளவாட உற்பத்தியில் தர உத்தரவாதத்தின் எதிர்காலம் குறித்து விவாதிப்பதற்கான மாநாடு புதுதில்லி மானக்‌ஷா அரங்கில் 2026 பிப்ரவரி 13 அன்று நடைபெற உள்ளது. 

கடற்படை மற்றும் ராணுவத் தளவாட உற்பத்தியில் தர உத்தரவாதத்தின் எதிர்காலம் குறித்து பாதுகாப்பு அமைச்சகம், இந்தியக் கடற்படை, தர உத்தரவாத முகமைகள், கப்பல் கட்டும் தளங்கள், பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் முன்னணி தொழில்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் விவாதிக்க உள்ளனர்.  கொள்கை வகுப்பாளர்கள், தொழில் துறை தலைவர்கள் ஆகியோர் நவீன, தொழில்நுட்பம் சார்ந்த தர உத்தரவாதத்திற்கான வழிவகைகளை வரையறுக்கவும், சிறந்த நடைமுறைகளை பரிமாறிக் கொள்வதற்குமான தளமாக இது அமையும். கப்பல் கட்டுமானத்திற்கான டிஜிட்டல் தர உத்தரவாதம் குறித்து குழு விவாதங்களுக்கான தொழில்நுட்ப அமர்வுகள் நடைபெற உள்ளது.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2226841&reg=3&lang=1

***

VL/IR/RJ/SH

 

(रिलीज़ आईडी: 2227201) आगंतुक पटल : 55
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी