மருந்துகள் துறை
azadi ka amrit mahotsav

மருந்து தொழில்நுட்பத் துறையில் ஆராய்ச்சி மற்றும் புதுமை கண்டுபிடிப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆராய்ச்சித் திட்டங்கள்

प्रविष्टि तिथि: 10 FEB 2026 12:53PM by PIB Chennai

மருந்து தொழில்நுட்பத் துறையில் ஆராய்ச்சி மற்றும் புதுமை கண்டுபிடிப்பு மேம்பாட்டின் பிரிவு ஏ-ன் கீழ், 7 தேசிய மருந்து உற்பத்திக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலா ஒரு திறன் மேம்பாட்டு மையங்களை மருந்து உற்பத்தித் துறை அமைத்துள்ளது. இம்மையங்கள் அமைப்பதற்காக 2026 ஜனவரி 31 வரை ரூ.183.46 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

மருந்து தொழில்நுட்பத் துறையில் ஆராய்ச்சி மற்றும் புதுமை கண்டுபிடிப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், அதிக நிதி பெறுவதற்கான தொழில்துறை, புத்தொழில் நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர  தொழில்துறை நிறுவனங்களிடமிருந்து மொத்தம் 710 ஆராய்ச்சித் திட்டங்கள் பெறப்பட்டது. இதையடுத்து பலதரப்பு மதிப்பீட்டிற்குப் பிறகு தகுதி வாய்ந்த திட்டங்களுக்கு முழு நிதியுதவி மற்றும் அதிக நிதியுதவி உள்ளி்ட்டவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்ரியா  படேல் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2225734&reg=3&lan

 

***

TV/IR/KPG/KR


(रिलीज़ आईडी: 2226499) आगंतुक पटल : 64
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी