குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் நினைவுதினத்தையொட்டி குடியரசு துணைத் தலைவர் அஞ்சலி செலுத்தினார்
இடுகை இடப்பட்ட நாள்:
11 FEB 2026 10:23AM by PIB Chennai
குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன், பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் நினைவுதினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா, ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட சிந்தனையாளராகவும், நாட்டைக் கட்டமைத்தவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர் என்றும், சமூக சேவைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். உபாத்யாயாவின் ஒருங்கிணைந்த மனிதநேயக் கொள்கை, அனைத்து உலக நாடுகளுக்கும் பொருத்தமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு கருணையுடன் சேவையாற்றுவது, பொது வாழ்க்கையில் நெறிமுறைகளை நிலைநிறுத்துவது என்பது அவரது வாழ்க்கையிலிருந்து அறிந்துகொள்ள வேண்டிய செய்தி என்றும், வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்குகளை எட்டுவதற்கான பயணத்தில், ஒரு வழிகாட்டும் சக்தியாகவும் உள்ளது என்றும் திரு சி பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
***
(Release ID: 2226154)
TV/IR/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2226417)
வருகையாளர் எண்ணிக்கை : 16