தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
தொழிலாளர்கள் மற்றும் தொழில் வழங்குனர்களால் தொழிலாளர் சட்டங்கள் பரவலாக அங்கீகரிக்கப்படுவதை விவி கிரி ஆய்வுகள் உறுதி செய்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
09 FEB 2026 1:55PM by PIB Chennai
தொழிலாளர் சட்டங்களின் அமலாக்கம், தொழிலாளர்கள் மற்றும் தொழில் வழங்குனரிடையே வலுவான நம்பிக்கை மற்றும் பரவலான நேர்மறையான வாய்ப்புக்களை நொய்டாவில் உள்ள வி.வி. கிரி தேசிய தொழிலாளர் நிறுவனம் நடத்திய தனிப்பட்ட கருத்து அடிப்படையிலான ஆய்வு பிரதிபலிக்கிறது.
"தொழிலாளர் சட்டங்களின் அமலாக்கம்: ஒரு கருத்து அடிப்படையிலான பகுப்பாய்வு" என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே இச்சட்டங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தையும், அதன் ஒருங்கிணைப்பையும் குறிக்கிறது. இது பொருளாதார செயல் திறனுடன்,தொழிலாளர் பாதுகாப்பு, நிறுவனங்களுக்கிடையே விவாதம் மற்றும் அவற்றை ஏற்றுக்கொள்ளும் மனநிலை போன்ற அம்சங்களை தொழிலாளர் சட்டங்களுடன் சமநிலைப்படுத்தும் நம்பிக்கையுடன் கூடிய சீர்திருத்த கட்டமைப்பாக நிலை நிறுத்துகிறது.
தொழிலாளர் சட்டங்கள், வாழ்க்கை வசதியை மேம்படுத்துதல் மற்றும் வணிகம் செய்வதை எளிதாக்குதல், சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துதல், நவீனமயமாக்கப்பட்ட தொழிலாளர் நட்புறவு மற்றும் எளிமையான, மிகவும் நெறிப்படுத்தப்பட்ட இணக்க நடைமுறை சார்ந்த அமைப்புகளுக்கு பங்களிப்பதாக உள்ளது என்று தொழிலாளர்களும் தொழில் உரிமையாளர்களும் கருதுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
தொழிலாளர் சட்டங்கள் கட்டமைப்பு ரீதியிலான சீர்திருத்தத்தை உருவாக்குவதுடன், அதன் விளைவுகள் காலப்போக்கில் முற்போக்கான மற்றும் வெளிப்படையான செயல்பாடுகளை அங்கீகரித்தன என்பதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2225342®=3&lang=1
(Release ID: 2225342)
****
TV/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2225585)
வருகையாளர் எண்ணிக்கை : 13