அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

இந்தியாவின் குவாண்டம் எதிர்காலம் அமராவதியிலிருந்து தொடங்குகிறது: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

இடுகை இடப்பட்ட நாள்: 08 FEB 2026 2:12PM by PIB Chennai

ஆந்திரப் பிரதேசத்தின் அமராவதியில் அமராவதி குவாண்டம் மையத்தின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் உரையாற்றிய மத்திய அறிவியல்  தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இது வெறும் கட்டடத்தின் அடிக்கல் அல்ல எனவும் இந்தியாவின் குவாண்டம் எதிர்காலத்திற்கான அடிக்கல் என்றும் கூறினார்.

குவாண்டம் தொழில்நுட்பத்தை ஒரு கட்டாயத் தேவை என அமைச்சர் தெரிவித்தார். இந்தியாவின் குவாண்டம் எதிர்காலம் அமராவதியிலிருந்து தொடங்குகிறது என அவர் கூறினார். இந்தியா ஒரு பிரத்யேக தேசிய குவாண்டம் இயக்கத்தைக் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளின் குழுவில் உள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார். 6,000 கோடி ஒதுக்கீட்டில், இந்த இயக்கம் 17 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் 43 நிறுவனங்களை உள்ளடக்கியதாக செயல்படுத்தப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.  தொழில்துறை மாற்றத்திற்கு குவாண்டம் தொழில்நுட்பம் முக்கியம் என்பதை அவர் விளக்கினார்.

அமராவதி குவாண்டம் மைய அடிக்கல் விழாவில் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு என். சந்திரபாபு நாயுடு, ஆந்திர மின்னணுவியல் துறை அமைச்சர் திரு நாரா லோகேஷ், மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் குமார் சூட், அறிவியல் - தொழில்நுட்பத் துறை செயலாளர் பேராசிரியர் அபய் கரண்டிகர், சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

***

(Release ID: 2225097)

TV/PLM/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2225226) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu , Kannada