PIB Backgrounder
azadi ka amrit mahotsav

இந்தியா செமிகண்டக்டர் இயக்கம் 2.0

प्रविष्टि तिथि: 07 FEB 2026 1:13PM by PIB Chennai

மத்திய பட்ஜெட் 2026–27, இந்தியாவின் தொழில்நுட்ப இலக்குகளில் ஒரு தீர்மானமான கட்டத்தை குறிக்கும் வகையில் இந்தியா செமிகண்டக்டர் இயக்கம் 2.0 அறிவிப்புடன் வெளியாகியுள்ளது. இந்த புதிய கட்டம், இன்றைய அனைத்து முக்கியமான டிஜிட்டல் மற்றும் தொழில்துறை அமைப்புகளின் அடித்தளமாக இருக்கும் சிப்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, உள்நாட்டு செமிகண்டக்டர் திறன்களை ஆழப்படுத்தும் தெளிவான கொள்கை முனைப்பை வெளிப்படுத்துகிறது.

இந்தியாவில் செமிகண்டக்டர் உபகரணங்கள் மற்றும் மூலப்பொருட்களின் உற்பத்தி, முழுமையான இந்திய செமிகண்டக்டர் அறிவுசார் சொத்துரிமை வடிவமைப்பு, மேலும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் இந்த இயக்கம் 2.0 கவனம் செலுத்தும். 2026–27 நிதியாண்டிற்கு ரூ. 1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தொழில்துறை தலைமையிலான ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையங்கள் மூலம் தொழில்நுட்ப மேம்பாட்டையும், எதிர்காலத்திற்குத் தயாரான திறமையான மனித வளத்தை உருவாக்குவதையும் இது முன்னிறுத்துகிறது.

செமிகண்டக்டர்கள் நவீன மின்னணு உலகின் முதுகெலும்பாக உள்ளன. கணினிகள், மொபைல் சாதனங்கள், தொலைத்தொடர்பு, வாகனங்கள், பாதுகாப்புத் துறை அமைப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அனைத்திற்கும் அவை சக்தியளிக்கின்றன. இந்திய செமிகண்டக்டர் இயக்கம் 1.0 – ன் கீழ், இந்தியா தனது முந்தைய முதலீடுகளை ஒருங்கிணைத்து, செமிகண்டக்டர் சூழலமைப்பில் முழு மதிப்புச் சங்கிலியை உருவாக்குவதில் தொடர்ச்சியான முன்னேற்றத்தை கண்டுள்ளது. இத்தகைய அடித்தளத்தின் மீது, இந்திய செமிகண்டக்டர் இயக்கம் 2.0 உலகளாவிய செமிகண்டக்டர் கட்டமைப்பில்  இந்தியாவின் நம்பகத்தன்மையையும் போட்டித் திறனையும் மேலும் உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தியா தற்போது உலகளாவிய செமிகண்டக்டர் மையமாக உருவெடுத்து வருகிறது. பெரும் அளவிலான முதலீடுகள், விரிவடையும் உற்பத்தித் திறன் உள்ளிட்டவை இந்தியாவின் செமிகண்டக்டர் பயணத்தில் உலகளாவிய நம்பிக்கை அதிகரித்து வருவதை காட்டுகின்றன. உள்நாட்டு சிப் சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. தொழில்துறை மதிப்பீடுகளின்படி, 2023-ம் ஆண்டில் இந்திய செமிகண்டக்டர் சந்தையின் அளவு சுமார் 38 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது; 2024–25 காலகட்டத்தில் அது 45–50 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது; மேலும் 2030-ம் ஆண்டில் 100–110 பில்லியன் டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வளர்ச்சியின் அடித்தளம், 2021 டிசம்பரில் மத்திய அமைச்சரவை அங்கீகரித்த இந்தியா செமிகண்டக்டர் இயக்கம் 1.0 மூலம் அமைக்கப்பட்டது. இந்த இயக்கம் ரூ 76,000 கோடி ஊக்கத்தொகை அமைப்பால் ஆதரிக்கப்படுகிறது;

உலகளாவிய போட்டி தீவிரமடைவதும், மேம்பட்ட சிப் தொழில்நுட்பங்கள் சில குறைந்த எண்ணிக்கையிலான நிறுவனங்களிடமே குவிந்து இருப்பதும் காரணமாக, இந்தியாவின் செமிகண்டக்டர் திட்டம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. நிலைபெற்ற செமிகண்டக்டர் சூழலமைப்பைக் கொண்ட பல நாடுகள் தீவிர ஊக்கத்திட்டங்களை வழங்கி வருகின்றன. இதனால், இந்தியா தனது அணுகுமுறையை மேலும் நுட்பமாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, திருத்தப்பட்ட திட்டம் செமிகண்டக்டர் உற்பத்தி, டிஸ்ப்ளே உற்பத்தி மற்றும் வடிவமைப்பு சூழலமைப்பில் முதலீடுகளுக்கான நிதி ஆதரவை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

***

(Release ID: 2224839)

TV/PKV/RK


(रिलीज़ आईडी: 2225049) आगंतुक पटल : 128
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Gujarati , Malayalam