குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

தொழில்நுட்பம், சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான கருவியாக இருப்பதை உறுதி செய்யப்பட வேண்டும் – குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு

இடுகை இடப்பட்ட நாள்: 06 FEB 2026 5:52PM by PIB Chennai

தொழில்நுட்பம், சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான கருவியாக இருப்பதை உறுதி செய்யப்பட வேண்டும் என்று குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு வலியுறுத்தியுள்ளார். ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர்,  முன்னெப்போதும் இல்லாத அளவில் விரைவான வளர்ச்சிக் கண்டு வரும் தொழில்நுட்பக் காலத்தில் இந்தியாவில் உள்ள அமைப்புகள், திறமைகள்  மற்றும் வர்த்தக மாதிரிகள் அதற்கேற்ப தங்களது திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது என்று கூறினார்.

அதே சமயத்தில் இணையவழிப் பாதுகாப்பு, தவறான தகவல்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் சார்புநிலை அதிகரிப்பு டீப் ஃபேக் போன்ற கடும் சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. எனினும் உலக அளவில் ஏற்பட்டு வரும் தொழில்நுட்ப மாற்றங்கள், புதிய கண்டுபிடிப்புகள், நேர்மறையான தாக்கங்களுக்கு வித்திட்டுள்ளன.

இந்த உச்சிமாநாடு போன்ற சர்வதேச அளவிலான நிகழ்ச்சிகள் வாயிலாக திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம். டிஜிட்டல் பரிவர்த்தனைகள் போன்ற துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளை ஆராய்ச்சி மேற்கொள்வதற்கும் வகை செய்கிறது.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் நிதிசார் கட்டமைப்பில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர் அரசின் நலத்திட்ட உதவிகள் நேரடிப் பணப்பரிவர்த்தனை வாயிலாக பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு வரவு வைக்கப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார். இந்தியாவின் நிதிசார் தொழில்நுட்பம், சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படும் வகையில் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். பழங்குடியினர் வசிக்கும் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக அவர்களது திறன் மேம்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கும் உதவிடும் என்று குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

***

(Release ID: 2224557)

TV/SV/KPG/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2224903) வருகையாளர் எண்ணிக்கை : 24
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Odia , Kannada , Malayalam