சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

‘முன்னேறும் விதர்பா 2026’ மாநாட்டை நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்: முதல் நாளில் 3 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

இடுகை இடப்பட்ட நாள்: 06 FEB 2026 5:56PM by PIB Chennai

மத்திய அமைச்சர் திரு.நிதின் கட்கரியின் தொலைநோக்குப் பார்வையில் உருவான ‘முன்னேறும் விதர்பா 2026 - 'நாடாளுமன்ற உறுப்பினர் தொழில்துறை மாநாடு', அதன் தொடக்க நாளிலேயே மூன்று முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களுடன் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது.

இந்த மாநாட்டில், மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் பல்வகை வாகனங்களுக்கான புதிய உற்பத்தி ஆலைகளை நிறுவ ரூ. 15,000 கோடி முதலீட்டை அறிவித்துள்ளது. சூப்பர் ஸ்மெல்டர்ஸ் நிறுவனம் கட்சிரோலியில் ஒரு ஒருங்கிணைந்த எஃகு ஆலையை அமைக்க ரூ. 10,100 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. மேலும், உலகளாவிய வர்த்தகம் மற்றும் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க ஜி.ஐ.பி.சி மற்றும் நாக்பூர் தொழில் மேம்பாட்டுச் சங்கம் இடையே ஒரு மூலோபாயக் கூட்டணிக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்தக் கூட்டணிகளுக்கு ஆதரவளித்த மகாராஷ்டிர முதல்வர் திரு. தேவேந்திர ஃபட்நாவிஸ் மற்றும் தொழில் கூட்டாளர்களுக்கு திரு.நிதின் கட்கரி நன்றி தெரிவித்தார். இந்த ஒப்பந்தங்கள் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் உள்கட்டமைப்பு விரிவாக்கத்தை வேகப்படுத்துவதோடு, உலகளாவிய உற்பத்திப் போட்டியில் விதர்பா மற்றும் இந்தியாவின் நிலையை வலுப்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

***

(Release ID: 2224561)

TV/VK/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2224865) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी