கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ட்ரோன் எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்புமுறையைத் தொடங்கும் இந்தியாவின் முதல் துறைமுகம் என்ற பெருமையைப் பெற்றது, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம்

இடுகை இடப்பட்ட நாள்: 06 FEB 2026 8:02PM by PIB Chennai

கடல் மற்றும் கடலோர பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன், நாட்டிலேயே முதன்முறையாக ட்ரோன் எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்புமுறை முன்முயற்சியை அறிமுகப்படுத்தும் முதல் துறைமுகம் என்ற பெருமையை, தூத்துக்குடியின் வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் பெற்றுள்ளது. முக்கிய துறைமுக உள்கட்டமைப்பின் பாதுகாப்பில் இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகக் கருதப்படுகிறது.

இந்தத் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் துறைமுக ஆணையத்தின் தலைமை இயந்திர பொறியாளர் திரு ஏ.கணேசன் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித் துறையின் கீழ் இயங்கும் மத்திய மின்னணு நிறுவனத்தைச் சேர்ந்த திரு அனுராக் அகர்வால் ஆகியோர் கையெழுத்திட்டார்கள். வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் தலைவர் திரு சுசந்தா குமார் புரோஹித், துணைத் தலைவர் திரு ராஜேஷ் சௌந்தரராஜன் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அடுத்த மூன்று மாதங்களுக்குள் திட்டப் பணிகளை நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2047-ஆம் ஆண்டை நோக்கிய அமிர்தகால தொலைநோக்குப் பார்வை மற்றும் 2030 இந்திய கடல்சார் தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றின் இலக்குகளுடன் இணைந்து, வளர்ந்து வரும் கடலோர பாதுகாப்பு நெறிமுறைகளுடன் இணக்கத்தை உறுதி செய்து, துறைமுகத்தில் அவசரகால எதிர் நடவடிக்கைகளுக்கான தயார் நிலையை மேம்படுத்தி, தேசிய பாதுகாப்பு மற்றும் கடல்சார் நெகிழ்தன்மையை வலுப்படுத்துவது, இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

***

(Release ID: 2224668)

TV/BR/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2224825) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी