எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

திறன் பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு 100% வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் தேசிய கனிம மேம்பாட்டுக் கழகம்

இடுகை இடப்பட்ட நாள்: 06 FEB 2026 12:51PM by PIB Chennai

இந்தியாவின் மிகப்பெரிய இரும்புத் தாது உற்பத்தியாளரான தேசிய கனிம மேம்பாட்டுக் கழகம் எனப்படும் என்எம்டிசி (NMDC) நிறுவனம்பஸ்தார் பகுதியைச் சேர்ந்த 80 இளைஞர்களுக்கு  முதல் கட்டமாக வேலை சார்ந்த திறன் பயிற்சியை வழங்கியது. இவர்கள் வெற்றிகரமாக முடித்து 100% வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். இது சத்தீஸ்கர் இளைஞர்களை தற்சார்புடையவர்களாக ஆக்குவதுடன்,  தேசத்தைக் கட்டியெழுப்புவதில் என்எம்டிசி-யின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.

இந்த திட்டம் என்எம்டிசி-யின் திறன் மேம்பாட்டு முயற்சியின் கீழ் நடத்தப்பட்டது. இது அதன் பெரு நிறுவன சமூகப் பொறுப்புணர்வு முயற்சிகளின் ஒரு பகுதியாகமத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல்தொழில்நுட்ப நிறுவனத்துடன் (சிப்பெட் - CIPET) இணைந்து நடத்தப்பட்டது. இந்த முயற்சிபஸ்தரின் பழங்குடி இளைஞர்களுக்கு தொழில் தொடர்பான திறன்களை வழங்குவதன் மூலமும்நிலையான வாழ்வாதாரத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது தொடர்பான பாராட்டு விழாவும்கலந்துரையாடல் அமர்வும் என்எம்டிசி-யின் தலைவர் திரு அமிதவா முகர்ஜிசிப்பெட் முதன்மை இயக்குநர் திரு பி. ரவி ஆகியோர் தலைமையில் மூத்த அதிகாரிகள்ஊழியர்களின் முன்னிலையில் நடைபெற்றது. சத்தீஸ்கரில் தந்தேவாடாபஸ்தர்சுக்மாநாராயண்பூர்கொண்டகான்பிஜாப்பூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் எளிமையான குடும்பங்களிலிருந்து வந்த இளைஞர்கள்வாய்ப்புகள் குறைவாக இருந்த சூழலைப் பற்றி இதில் பேசினர். திறன் பயிற்சித் திட்டம்வேலைவாய்ப்பை வழங்கிசொந்தமாக சம்பாதிக்கத் தொடங்குவதற்கான நம்பிக்கையையும் அளித்ததாக அவர்கள் கூறினர்.

என்எம்டிசிசிப்பெட் ஆகியவை இணைந்து தண்டேவாடாபஸ்தர் மாவட்டங்களைச் சேர்ந்த 500 இளைஞர்களுக்கு இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சியை வழங்குகிறது. என்எம்டிசி-யால் முழுமையாக நிதியளிக்கப்படும் இந்த முயற்சி தொழில்துறை தொடர்பான திறன்களை பங்கேற்பாளர்களுக்கு வழங்குகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2224335&reg=3&lang=1

***

TV/ PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2224623) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी