வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆஸ்திரேலியா-இந்தியா வணிக ஆய்வுகள் தொகுப்பு வெளியீடு

प्रविष्टि तिथि: 06 FEB 2026 11:31AM by PIB Chennai

இந்தியா–ஆஸ்திரேலியா இடையிலான வணிக உறவை வலுப்படுத்தும் நோக்கில்வணிகக் கள ஆய்வுத் தொகுப்பு, தில்லியில் உள்ள இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவன வளாகத்தில் வெளியிடப்பட்டது.

இந்தத் தொகுப்பை ஐஐஎப்டி மற்றும் நியூலேண்ட் குளோபல் குழுமம் இணைந்து உருவாக்கியுள்ளன. இதில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் செயல்படும் 30 நிறுவனங்களின் வணிக அனுபவங்கள், சந்தை நுழைவு முறைகள், வளர்ச்சி யோசனைகள் மற்றும் அவர்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அரசு அதிகாரிகள், தூதர்கள், தொழில் தலைவர்கள் மற்றும் கல்வியாளர்கள் இதில் கலந்து கொண்டு, இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் இந்தியா–ஆஸ்திரேலியா வர்த்தக ஒப்பந்தம் பற்றிய பயன்களைப் பற்றி பேசினர்.

இந்தத் தொகுப்பு, வணிக நிறுவனங்கள், கொள்கை அமைப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஒரு பயனுள்ள வழிகாட்டியாக இருக்கும் என்றும், இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதார உறவை மேலும் வலுப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2224290&reg=3&lang=1

***

TV/PKV/RK


(रिलीज़ आईडी: 2224501) आगंतुक पटल : 82
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Gujarati