சுற்றுலா அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மகாராஷ்டிராவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 3 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது – மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத்

இடுகை இடப்பட்ட நாள்: 06 FEB 2026 11:07AM by PIB Chennai

இந்தியாவை சுற்றுலாவுக்கு ஏற்ற சிறந்த இடமாக உருவாக்கும் வகையில் மத்திய சுற்றுலா துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வெளிநாட்டு சுற்றுலா சந்தை வாய்ப்புகளை ஊக்குவிக்கும் வகையில், அத்துறைச் சார்ந்த நடவடிக்கைகள் உத்வேகம் பெற்றுள்ளது. சர்வதேச கண்காட்சிகள், பொருட்காட்சிகள் மற்றும் வர்த்தக நிகழ்ச்சிகள் மூலம் வெளிநாட்டுப் பயணிகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் இதில் அடங்கும்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக சுற்றுலாப் பயண முகமைகள், ஊடகங்கள், உணவுத் திருவிழாக்கள் போன்ற பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மத்திய அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டத்தின் கீழ் மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளும் இணைந்து செயல்படுவதன் மூலம் இத்துறையின் வளர்ச்சிக்கு மேலும் உதவிடும்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் காரணமாக கடந்த 3 ஆண்டுகளில் அம்மாநிலத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2224263&reg=3&lang=1

***

TV/SV/KPG/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2224492) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi