அணுசக்தி அமைச்சகம்
அணுசக்தி விரிவாக்கம் மற்றும் சாந்தி சட்டம் மாநிலங்களவையில் அமைச்சர் விளக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
05 FEB 2026 3:50PM by PIB Chennai
புதுதில்லி, பிப். 05: இந்தியாவில் அணுசக்தி விரிவாக்கம் மற்றும் புதிய உலை தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது குறித்து, பணியாளர், பொது குறைகள் மற்றும் ஓய்வூதியம் மற்றும் பிரதமர் அலுவலக இணை அமைச்சர் திரு. ஜிதேந்திர சிங் இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தார்.
அமைதி வழியில் அணுசக்தியைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள சாந்தி சட்டம், அணுசக்தி மற்றும் கதிர்வீச்சு தொடர்பான ஆராய்ச்சி, மேம்பாடு, வடிவமைப்பு மற்றும் கண்டுபிடிப்புகளை எவரும் உரிமம் பெறாமலேயே மேற்கொள்ள அனுமதிக்கிறது. நாட்டில் புதிய அணு உலை தொழில்நுட்பங்களை உருவாக்குவதையும், அவற்றைச் செயல்படுத்துவதையும் ஊக்கப்படுத்துவதே இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்று அவர் தெரிவித்தார்.
அணுசக்தி திட்டங்களுக்குத் தேவைப்படும் அதிகப்படியான ஆரம்பகட்ட முதலீடு மற்றும் நீண்டகாலப் பொறுப்புகள் போன்ற சவால்களைக் கையாள, நிதி அபாயங்களைப் பகிர்ந்து கொள்ளும் வழிமுறைகள் குறித்து அரசு உரிய கவனம் செலுத்தி வருகிறது. பங்குதாரர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டும், சாந்தி சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டும் நிதி நடைமுறைகள் வகுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2223792®=3&lang=1
***
TV/VK/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2224386)
வருகையாளர் எண்ணிக்கை : 5