அணுசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் அணுமின் உற்பத்தித் திறன் விரிவாக்கம் அமைச்சர் விளக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 05 FEB 2026 3:49PM by PIB Chennai

நாட்டின் அணுமின் உற்பத்தித் திறன் மற்றும் தற்போது செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் குறித்து மத்திய இணை அமைச்சர் திரு. ஜிதேந்திர சிங் இன்று மாநிலங்களவையில் விரிவான தகவல்களை வழங்கினார்.

தற்போது நாட்டில் 24 அணுமின் நிலையங்கள் மூலம் 8,780 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுதவிர, 13,100 மெகாவாட் கூடுதல் திறனுக்காக 17 அணு உலைகள் பல்வேறு நிலைகளில் உள்ளன. இதில் 7 உலைகள் கட்டுமானத்திலும், 10 உலைகள் முதற்கட்டப் பணிகளிலும் உள்ளன. இவை அனைத்தும் 2031-32 ஆம் ஆண்டிற்குள் படிப்படியாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு திட்டங்கள்: தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட 'அதிவேக ஈணுலை  சோதனை  நிலையில் உள்ளது. மேலும், அங்கு தலா 500 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு புதிய வேக உலை  திட்டங்களுக்கும் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல், கூடங்குளத்தில் தலா 1000 மெகாவாட் திறன் கொண்ட 4 அணு உலைகளின் (கேகேஎன்பிபி 3,4,5 & 6) கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

அணுமின் நிலையங்களைப் பொறுத்தவரை, சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு  ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, உரிய அனுமதி பெற்ற பின்னரே கட்டுமானப் பணிகள் தொடங்கப்படுகின்றன. அணு உலைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் பணிகள் ஒரு தொடர் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2223790&reg=3&lang=1

***

TV/VK/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2224385) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी