அணுசக்தி அமைச்சகம்
அணுசக்தி உற்பத்தியை அதிகரிப்பதில் உள்ள சவால்கள் மற்றும் தீர்வுகள்
இடுகை இடப்பட்ட நாள்:
05 FEB 2026 3:47PM by PIB Chennai
இந்தியாவின் அணுசக்தித் திறனை உயர்த்துவதில் உள்ள சவால்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, மத்திய இணை அமைச்சர் திரு. ஜிதேந்திர சிங் இன்று மாநிலங்களவையில் விரிவான விளக்கமளித்தார். அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து இந்திய அணுசக்தி கழகம் மற்றும் அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் ஆகியவை தொடர்ச்சியான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. உள்நாட்டு மற்றும் சர்வதேச அனுபவங்களைக் கொண்டு, அணு உலைகளின் வடிவமைப்பு, பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் பணியாளர் பயிற்சி ஆகியவற்றில் உலகளாவிய தரத்திற்கு ஏற்ப அவ்வப்போது மேம்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அணுசக்தித் திறனைப் பெரிய அளவில் அதிகரிப்பதில் நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வுப் பணிகளில் உள்ள சிக்கல்கள், சட்டப்பூர்வமான அனுமதிகளைப் பெறுதல் மற்றும் அணுசக்தி பாதுகாப்பு குறித்து மக்களிடையே நிலவும் அச்சம் ஆகியவை முக்கிய சவால்களாக உள்ளன. மேலும், இதற்கான அதிகப்படியான முதலீட்டுத் தேவை மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான உபகரண விநியோகஸ்தர்கள் போன்ற காரணிகளும் ஒரு தடையாக இருக்கின்றன.
இச்சவால்களை எதிர்கொள்ள மாநில அரசுகளுடன் இணைந்து நிலம் கையகப்படுத்தும் பணிகளை இந்திய அணுசக்தி கழகம் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகிறது. அணுசக்தி குறித்த தேவையற்ற அச்சங்களைப் போக்கி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தச் சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மேலும், அணுசக்தித் துறையில் கூடுதல் முதலீடுகளை ஈர்க்கவும், அதிகப்படியான பங்களிப்பை உறுதி செய்யவும் சாந்தி சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் திரு. ஜிதேந்திர சிங் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2223783®=3&lang=1
***
TV/VK/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2224383)
வருகையாளர் எண்ணிக்கை : 6