பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய பொதுக் குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பான சிபிஜிஆர்ஏஎம்எஸ் புகார்கள் தீர்க்கப்படும் வேகம் அதிகரிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 05 FEB 2026 3:57PM by PIB Chennai

மத்திய பொதுக் குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பான சிபிஜிஆர்ஏஎம்எஸ் இணையதளம் மூலம் பொதுமக்களின் புகார்கள் தீர்க்கப்படுவது குறித்து, மத்திய இணையமைச்சர் திரு. ஜிதேந்திர சிங் இன்று மாநிலங்களவையில் விளக்கமளித்தார். 2024-25 ஆம் ஆண்டில் சுமார் 22.23 லட்சம் புகார்கள் பதிவு செய்யப்பட்டு, 23.02 லட்சம் புகார்கள் தீர்க்கப்பட்டுள்ளன.

மத்திய அமைச்சகங்களில் ஒரு புகாரைத் தீர்ப்பதற்கான சராசரி காலம் 15 நாட்களாகவும், மாநிலங்களில் 64 நாட்களாகவும் குறைந்துள்ளது. 17 மாநிலங்கள் மற்றும் 4 மத்திய அமைச்சகங்களின் இணையதளங்கள் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுச் சேவை மையங்கள்  மூலமாகவும் மக்கள் புகார்களைப் பதிவு செய்ய முடியும். 'சேவோத்தம்' திட்டத்தின் கீழ், கடந்த மூன்று ஆண்டுகளில் 27,854 அரசு அதிகாரிகளுக்குக் குறைதீர்ப்பு மேலாண்மை குறித்துப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. புகார் தீர்க்கப்படும் வேகம் மற்றும் மக்களின் திருப்தி உள்ளிட்ட 11 காரணிகளின் அடிப்படையில் அமைச்சகங்களின் செயல்பாடுகள் மதிப்பீடு செய்யப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2223804&reg=3&lang=1

***

TV/VK/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2224347) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी