வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
அடல் நகர்ப்புற மறு சீரமைப்பு திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு முறை
प्रविष्टि तिथि:
05 FEB 2026 5:11PM by PIB Chennai
அடல் நகர்புற மறு சீரமைப்பு திட்டம் (அம்ருத்) திட்டத்தின் நிதி மாதிரி மற்றும் செயல்பாடுகள் குறித்து மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் திரு. தோக்கன் சாகு இன்று மக்களவையில் விளக்கமளித்தார்.
2015-இல் தொடங்கப்பட்ட இத்திட்டம், தற்போது 'அம்ருத் 2.0' ஆக விரிவுபடுத்தப்பட்டு, நகரங்களைத் தண்ணீரில் தன்னிறைவு பெற்றவையாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கல், பாதாள சாக்கடை மேலாண்மை மற்றும் நீர்நிலைகள் புத்துயிர் அளித்தல் ஆகியவற்றுக்காகப் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை நகர்ப்புறங்களில் 238 லட்சம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை மறுசுழற்சி செய்வதை ஊக்குவிக்க 'ஜல் ஹி அம்ரித்' என்ற புதிய முயற்சியை அரசு தொடங்கியுள்ளது. மேலும், 'அம்ருத் மித்ரா' திட்டத்தின் மூலம் 38,000-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் நீரின் தரத்தைப் பரிசோதிக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் தூய்மையான குடிநீர் மற்றும் சுகாதாரமான நகர்ப்புறக் கட்டமைப்பை உறுதி செய்ய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2223878®=3&lang=1
***
TV/VK/RK
(रिलीज़ आईडी: 2224342)
आगंतुक पटल : 58